
கண்ணை மூடினால் வருகின்ற
இருட்டை
உடனே வெளிச்சமாக்கவில்லை
முன்னால் என்ன அதுவென்று
அதில் ஒரு பொருளை வைத்தேன்
இருட்டு அதனை வாங்கவில்லை
வைக்கவில்லை என்றது இருட்டு
இவ்வளவு பிரச்சினையை
முன்னால் வைத்துக் கொண்டா
இது கல் இது கரண்டி எனப் பிரித்து
மகிழ்ச்சி காண்கின்றேன்
பாத வடிவ உடல்
எல்லா உறுப்புகளும் சேர்ந்து தான்
இந்த உடலை கீழே வைக்கின்றன
பாத வடிவில் மட்டுமே இந்த உடல்
ஆனால் மண்ணில் பதிகின்றது
பாதம் மாதிரி உடல் இல்லை
பாதம் மாதிரி உடல் உறுப்புகள் இல்லை
ஆனால் மொத்த உடலும் பாதத்தை
அவ்வளவு நம்புகின்றது
என் பாதத்தில் ஒரு முறை
நானுமே விழுந்து எழுந்தேன்
