Site icon சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

நாவித யுகம்!

மழித்து எறியப்படும்
முகங்கள்
இடைச்செருகும்
ஜில்லட் பற்களில்
அவிழும்

அதனிலும்
அப்பட்டமாய்
கண்ணாடி பிம்பம்
சுழிபடும்
நிழல் யதார்த்தம்

உதறிடும்
கையறு நிலையில்
அகாலமாய்
வீடுவரை
அயல் முகம்!

Exit mobile version