
காணாதுபோன
நாட்களின்
வாதைகளில்
உருகுகிறது
துருவங்களின்
கரைதலாக
தேக மெலிவில்.
உத்திரவாத மற்று
ஒவ்வொரு பொழுதும்
கழிகிறது
மகிழ்ந்த பொழுதின்
நினைவுகளின்
சாரம் தின்று
உடற்க்கூட்டில்
உயிரென ஒன்று
வாழ்ந்து.
ஒவ்வொரு முறை
வீடு மாற்றும்போதும்
ஒடித்து
உருவாக்கிய
ஒற்றைச்
செம்பருத்தி செடி
உருமாற்றிவிட்டது
ஒரு அழகிய
நந்தவனமாக
இச்சிறு நகரத்தை
அடையாள ஆடையாக.
வாக்கு தப்பிய
துயரம் கடந்து
வயோதிகமானாலும்
வந்துவிட்டுப் போகலாம்
என்
நினைவுகளுக்கும்
நிறமுண்டென
அறிய.
