எண்ணம்
எண்ணங்களை
ஏழு வண்ணங்களாக
மாற்றி
ஒவ்வொரு வண்ணத்திலும்
ஆயிரம் ஆயிரம் எண்ணங்களை
வைத்து
வானத்தில்
பறக்க விட்டேன்
படத்தை போல கயிறு கட்டி
நீல வானம்
பல வண்ணங்கள் கொண்ட வானமாக மாறி போனது
சிட்டு
ஊதா நிற ஓசனிச்சிட்டு
சாரலில் நனைந்து கொண்டு
அந்தரத்தில்
சிறகை பட பட வென்று
அடித்து கொண்டு
தன்னை நிலைநிறுத்தி கொண்டு
ஜிமிக்கிப்பூக்களை
சுற்றி சுற்றி
தேன் குடித்தது
வேழாழி
காரிகை
வேழாழி மணலில்
தன் பாதங்களை எடுத்து
தொட்டு தொட்டு
அலைகளிடம் சென்றாள்
கருமை நிறம் கொண்ட
மணிகள் நனைந்தன
மணல் பிரதி
எடுத்து கொண்டே இருத்தது
அலைகளை மெல்ல எடுத்து பார்த்து விட்டு கொடுத்து விட்டாள்
அது மீன்களை போல நீந்தியது
