Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

திக்குதல்

இங்கிலிஷிலிருந்து தமிழாக்கம்: தி.இரா. மீனா

திக்குதல் என்பது ஊனமல்ல
அது பேச்சின் ஒரு முறை.

திக்குதல் என்பது,
சொல்லுக்கும் அதன் பொருளுக்குமிடையேயான மௌனம்,
அது வார்த்தைக்கும் செயலுக்குமிடையேயான
தடுமாற்றம் போன்றது.

திக்குதல் மொழியை
முன் நடத்துகிறதா? அல்லது பின் தொடர்கிறதா ?
அது வெறும் கிளைமொழியா அல்லது
அதுவே மொழியா?
இந்தக் கேள்விகள் மொழியியலாளரை
திக்குதலுக்குள்ளாக்கும்.

ஒவ்வொரு முறை நாம் திக்கும் போதும்
சொற்களின் கடவுளுக்கு
ஒரு படையல் நடத்துகிறோம்.
ஒரு முழு இனமே திக்கும் போது
திக்குதல் அவர்களின் தாய்மொழியாகிறது:
நம்மிடம் இப்போது இருப்பதைப் போல.

மனிதனைப் படைக்கும் போது
கடவுளும் திக்கியிருக்க வேண்டும்.
அதனால்தான்
மனிதனின் வார்த்தைகள் எல்லாம்
வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றன.
அதனால்தான்
அவன் சொல்லும் எல்லாமும்
அவன் வழிபாட்டிலிருந்து தொடங்கி கட்டளைகள்
வரை அனைத்தும்
திக்கலாக இருக்கின்றன,
கவிதையைப் போல.

~oOo~

V.S Gaitonde, Untitled, 1963.

വിക്ക്

വിക്ക് വൈകല്യമല്ല,
ഒരു സംസാരരീതിയാണ്.

വാക്കിനും അർത്ഥത്തിനുമിടയ്ക്കു വരുന്ന
ചില മൗനങ്ങളെയാണ്
നാം വിക്കെന്നു വിളിക്കുന്നത്
വാക്കിനും പ്രവൃത്തിക്കുമിടയ്ക്കുള്ള മൗനങ്ങളെ
മുടന്തെന്നു വിളിക്കുംപോലെതന്നെ.

ഭാഷയ്ക്ക് മുമ്പാണോ വിക്കുണ്ടായത്
അതോ ഭാഷയ്ക്കു ശേഷമോ?
ഭാഷയുടെ ഒരു പ്രാദേശിക വ്യതിയാനമാണോ വിക്ക്,
അതോ സ്വയം ഒരു ഭാഷയോ:
ഈ ചോദ്യങ്ങൾക്കു മുമ്പിൽ
ഭാഷാശാസ്ത്രജ്ഞർ വിക്കുന്നു.

ഓരോ കുറി വിക്കുമ്പോഴും നാം
അർത്ഥങ്ങളുടെ ദൈവത്തിന്
ഒരു ബലി നല്കുകയാണ്.
ഒരു ജനത ഒന്നിച്ചു വിക്കുമ്പോൾ
അവരുടെ മാതൃഭാഷ വിക്കാകുന്നു;
ഇപ്പോൾ നമ്മുടേതെന്നപോലെ.

മനുഷ്യനെ സൃഷ്ടിച്ചപ്പോൾ
ദൈവവും വിക്കിയിരിക്കണം.
അതുകൊണ്ടാണ് മനുഷ്യരുടെ
എല്ലാ വാക്കുകളും ദുരൂഹമായത്
അതുകൊണ്ടാണ് മനുഷ്യരുടെ
പ്രാർത്ഥനകൾ മുതൽ കല്പനകൾ വരെ
എല്ലാം വിക്കുന്നത്,

കവിതയെപ്പോലെ.

Exit mobile version