Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

மகரந்தம்


[stextbox id=”info” caption=”யூரோப்பிய ஒன்றிய அமைப்பில் என்ன நடக்கிறது?”]

என்ன ஆகப்போகிறது யூரோப்பிய ஒன்றிய அமைப்பில் என்று யோசிக்கிறார் வோல்ஃப்காங். கிரேக்கர்களுக்கும், ஸ்பானியர்களுக்கும், கிழக்கு ஜெர்மனியர்களுக்குமிடையே ஒரே பிரச்சினையைச் சமாளிப்பதில் எத்தனை வேறுபாடுகள். அவை ஏன் அப்படி நேர்ந்தன? இதெல்லாம் யூரோப்பிய ஒன்றியத்தைக் குலைத்து அழிக்குமா என்று கேட்கிறார். ஒரே வகைப் பிரச்சினை என்று சொல்வதே சிறிது பொருத்தமில்லாத வருணனை. பிரச்சினை ஒன்றைத் தீர்க்க வேண்டுமானால் முதலில் அதன் இயல்பை நன்கு அறிவது அவசியம். கிரேக்கர்களின் பொருளாதாரம், பண்பாடு, அரசியல் அமைப்புகள், அங்கு செயல்படும் கருத்தியல் தாக்கங்கள், மக்களிடையே உள்ள பற்பல குழு அமைப்புகளின் வேற்றுமைகள் ஆகியன எல்லாம் சேர்ந்துதான் ஒரு பெரும் பிரச்சினை உருவாகி இருக்கிறது. அதே போலத்தான் ஸ்பெயினிலும், போர்ச்சுகலிலும், கிழக்கு ஜெர்மனியிலும் வெவ்வேறு பாதைகளில் பயணம் நேர்ந்து பிரச்சினைகளுக்கு ஒரு வடிகால் கிட்டுகிறது. இவை அனைத்தையும் ஒரே ஆயுதத்தால் தீர்க்க அவை உடற்கூறு போலவோ, இயற்கையின் கட்டமைப்பு போலவோ நம்பத்தக்க விதங்களில் இயங்கும் அமைப்புகள் இல்லை. திரும்பத் திரும்ப நவீன உலகம் செய்யும் ஒரு பிழை இதுதான். சமூகங்களை ஒரே போல எண்ணி அவற்றை வடிவமைக்க முயல்வது. வோல்ஃப்காங் இந்த விதத்தில் அலசவில்லை என்றாலும், குறைந்தது வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு விடைகள் தேவைப்படும் என்றாவது அறிந்திருக்கிறார். கட்டுரை சிறியதுதான், படித்து மேலான புரிதல் கிட்டுகிறதா என்று பார்க்கலாமே.

http://wolfgangstreeck.com/2015/08/17/brutish-nasty-and-not-even-short-the-ominous-future-of-the-eurozone/

[/stextbox]


[stextbox id=”info” caption=”டச்சு காலனியமும் இடதுசாரிகளும்”]

டச்சு காலனியத்தால் இந்தோனேசியா என்று இன்று அழைக்கப்படும் நிலப்பகுதியில் இருந்த மக்கள் எப்படி எல்லாம் அவதிப்பட்டனர். எப்படிப் படுகொலைகளை யூரோப்பியர் நிகழ்த்தினர். இன்று அதே யூரோப்பியர் எப்படி ஆசியர்களுக்கு அறபோதனை செய்கின்றனர் என்பதைப் பற்றி ஒரு இந்தோனேசியப் பத்திரிகையில் நடக்கும் சிறு சர்ச்சை. இந்தியர்களில் யூரோப்பை விழுந்து வணங்குவோரில் இந்திய இடதுசாரிகள் முதல் வரிசையில் இருப்பவர்கள். ஆனால் தாம் ஏதோ காலனியத்தை எதிர்ப்பவர்கள் என்றும் பாவலா காட்டுவதில் வல்லவர்கள். அவர்களாகட்டும், இந்தோனேசியாவின் பல அரசியலாளர்களாகட்டும் யூரோப்பிய மோகத்தை விட்டு விலகும் துணிவோ, சக்தியோ உள்ளவர்களா? சந்தேகம்தான். இது நடந்தால் அது அற்புத அதிசயம் என்றுதான் கருத வேண்டி வரும்.

http://www.thejakartapost.com/news/2015/11/13/comments-other-issues-atrocities-during-colonial-era.html
[/stextbox]

Exit mobile version