அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள மருத்துவ-உயிரியல் ஆய்வகம் ஒன்றிலிருந்து வைரஸ் அடங்கிய ஒரு குப்பி ‘காணாமல் போன’ சம்பவத்தை இந்த அறிக்கை தெரிவிக்கிறது. வெனிசுலா நாட்டின் ஒருவகை எலிகளைத் தாக்கும் ‘க்வானாரிடோ’ என்றழைக்கப்படும் இந்த வைரஸ், பாதிக்
*****
ஆரம்பகாலங்களில் மின்னணு ‘சிப்’ களைச் சிறிய விலங்குகளின் உடலுக்குள் புதைத்து அதன் மூலம் ஒட்டுக் கேட்பது போன்ற உளவு வேலைகள் செய்ய விஞ்ஞானிகள் முயன்றனர். ஆனால் அந்த விலங்குகளைத் தாங்கள் உளவு பார்க்க நினைக்கும் இடத்திற்கு போகச் செய்யுமாறு கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று உயிர்த் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, நரம்பியலின் வளர்ச்சி, கூடவே பரவலாக உயிரியலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மரபணுத் தகவல்களைக் கொண்டு விஞ்ஞானிகள் இந்த முடக்கத்தை மீற முயல்கிறார்கள். மரபணுப் பொறியியல் மூலமாக எலி, கரப்பன் பூச்சி, தேனீ போன்றவற்றின் மூளையில் வேறு சில மரபணுக்களைச் செலுத்தி சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமாக அவற்றை தாங்கள் விரும்பும் திசையிலும், இடத்திற்கும் நகரச் செய்து, அதை உளவு வேலைகளுக்குப் பயன்படுத்த முயற்சி செய்கிற ஆய்வுகளைப் பற்றிய சுவாரசியமான கட்டுரை. ஆரம்ப நிலையில் இருந்தாலும், நம்ப முடியாத விஞ்ஞானப் புனைவுகள் உண்மையாகும் காலம் இது!
http://www.salon.com/2013/03/23/science_fiction_turns_real_genetically_engineering_animals_for_war/
*****
கடவுள் மன்னிக்கட்டும், தற்போது இந்தியா யுத்தத்தில் பங்கேற்க நேரிட்டால் அஸ்வினும் ஹர்பஜனும் போர் முனைக்கு செல்லுவார்களா என்பது சந்தேகமே.
ஆனால் இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின் பௌலர் யார்க்ஷையரின் ஹெட்லி வெரிட்டி (Hedley Verity) இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் தன்னிச்சையாக சேர்ந்தார். சிசிலியில் கமாண்டராகச் சண்டையில் காயமுற்று ஜெர்மானியரால் சிறைபிடிக்கப்பட்டார்.பின் கடுமையான காயங்களால் மரணமடைந்தார்.
இவர் (கிரிக்கெட்) உலகின் புகழ் பெற்ற `Body line’ தொடரில் பங்கேற்றவர், கேப்டன் டக்ளஸ் ஜார்டின்னின் விருப்பமான ஸ்பின்னர். முக்கியமாக, உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேன் டான் பிராட்மேனை டெஸ்ட் போட்டிகளில் அதிகம் அவுட் செய்தவர் (8 தடவைகள்).
இவரைப்பற்றிய ஒரு உருக்கமான பார்வை கீழே
http://www.espncricinfo.com/magazine/content/story/627878.html
கொசுறு செய்தியாக டக்ளஸ் ஜார்டினும் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றார். கடுமையான காயமடைந்தாலும் உயிர் தப்பினார்.
*****
இதில் உள்ள ஒளிப்படம் நெதர்லாந்தைப் படம் பிடித்துக் காட்டுகிறதா என்று யோசித்தேன். பொதுவாக யூரோப்பியர் அமெரிக்கரளவு கார்களை மையமாகக் கொண்ட வாழ்க்கை வாழ்வதில்லை. நிறையவே சைக்கிள்களையும், பொது ஊர்திகளையும் பயன்படுத்துபவர்கள்தான். அதனால் முச்சக்கர பொருள் கடத்தும் வண்டியை இந்தப் பெண் பயன்படுத்துவது நெதர்லாந்தில் வறுமை நெளிகிறது என்பதைச் சுட்டுவதாகக் கொள்ள முடியாது. அதே நேரம் இந்தப் படம் அதிக விவரம் தெரியாத உலக வாசகர்களுக்கு ஒரு சின்னம் போல (Icon) யூரோப்பியச் சரிவைக் காட்டும் படமாகத் தெரிய வாய்ப்பு இருக்கிறதென்பதென்னவோ நிஜம்.
ஆம் உலகக் காலனியம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு யூரோப்பியரை உந்தியதும், டேகார்ட், போன்றாருக்குப் புகலிடம் கொடுத்து, லைப்னிட்ஸ் போன்றாருடைய பல தளச் சிந்தனைக்கு இடம் கொடுத்து மதச்சிந்தனை/ மீபொருண்மை ஆகியவற்றிலிருந்து சான்றுகளையும், முன்னூகங்களையும் இணைக்கும் தர்க்க முறைப்படி அறிவியலை முன்னகர்த்தும் முறைக்கு வழிகோலியதும் இந்தப் பிராந்தியத்தின் கலவையான அளிப்பு. இன்று யூரோப்பிய ஐக்கியம் தடுமாறி நிற்பதற்கு இப்பகுதியின் சரிவு ஒரு சான்று.
http://www.spiegel.de/international/europe/economic-crisis-hits-the-netherlands-a-891919.html
*****
’நார்டிக் மாடல்’ பெயருக்குக் காப்புரிமை- சோசலிச ஜனநாயகக் கட்சியின் கோரிக்கை
இந்த வருடம் ‘எகானமிஸ்ட்’ பத்திரிகை ’நார்டிக் நாடுகள்- அடுத்த சூப்பர் முன்மாதிரி’ என்று ஒரு கட்டுரை பிரசுரித்தது. அதொன்றுமில்லை, சமீபத்திய பொருளாதாரச் சரிவில் மொத்த யூரோப்பும் கலகலத்து நொந்து போயிருக்கையில்,ஜெர்மனியைத் தவிர சுதாரித்து நின்ற, இன்னும் கொஞ்சமாவது வளர்கிற நாடுகள் என்று பார்த்தால் ஸ்வீடனும், நார்வேயும். ஐஸ்லாந்து கூட பயங்கரமாக நொடித்துப் போய் விட்டு, இப்போது ஓரளவு எழுந்திருக்கிறது. ஃபின்லாந்தும் ஓரளவு எழுகிறது.
http://www.magasinetarena.se/2013/02/14/historieatarna-striden-om-den-nordiska-modellen/
*****
