Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

பார்த்து போ

கனத்த மழை பொழியும்
நேற்றைய நாளில் அவளைக் கண்டேன்
வேறு யாரோ ஒருவரோடு பயணமாகிக்கொண்டிருந்தால் பேருந்தில் மழை நின்றும்
லேசான தூரல் தொடங்கியது
நானே மீண்டும்
பெருத்த மழையில் நினைகிறேன்
சடாரென்று நினைவுக்குள் புயலடிக்க தொடங்குகிறது
பள்ளி இடைவேளையின்
போது நானும் அவளுமாக
காகித கப்பல் செய்து
மழையில் நனையாமல் பாதுகாத்தது
நனைய ஆரம்பித்தது இதயம்,


இன்றைய நாளில் ஏதாவது ஒன்றை
தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க
போறீர்கள் என்றால்
முதலில் மரங்களை வரைய கற்றுக்கொடுங்கள்
அவர்களுக்குள் தானாகவே
பறவைகள் வளரத் தொடங்கிவிடும்
பேச ஆளில்லா
நேரங்களில் பறவைகளோடாவது
பேசிக்கொள்வார்கள் குழந்தைகள்,


எப்பொழுதும் போல
இப்பொழுது
போயிட்டு வரேனென்று
சொல்லுவதற்கு வாயெடுத்து
வார்த்தைகள்
வாய்க்குள் சிக்கிக்கொண்டது
சுவருக்கு மேலே படரும் என் கண்கள்
சிரித்தபடியே
அப்பாவின் பழைய புகைப்படம்
ஒரு நிமிடமேனும்
கண்கள் கலங்கின
கடந்து செல்ல மனமில்லாமல்
போகிறேன்
கடந்து போகும் வழியெங்கும் பார்க்கிறேன்
அப்பாவின் முகமாகவே
பல அப்பாக்களின் முகம்
அவர்களுக்கு பிள்ளைகள்
இருப்பார்கள் அல்லவா
பார்த்து போ என்கிறது மீண்டும் அப்பாவின் நினைவு ,

Exit mobile version