Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

என் காதலியின் கண்கள்
சூரியக் கதிர்களாய் ஒளிர்வதில்லை.
அவளின் இதழ்
பவளத்தின் சிவப்பிறகு ஒப்பில்லை..
பழுப்பு நிறமாயிருக்கும் அவள் மார்பகங்களை
வெண்பனியென்று எப்படிக் கூறுவது?
கேசம் சுருள் கம்பியானால்
கருப்பு கம்பிகள் வளரும் அவள் தலையில்.
சிவப்பும் வெண்மையுமாய் சிலிர்த்து நிற்கும்
ரோஜாக்களை கண்டிருக்கிறேன்.
ஆனால் அவள் கன்னத்தில்
அதெல்லாம் பூக்கவில்லை.
என் காதலியின் மூச்சுக்காற்றில்
பரவும் மணம்.
அதைவிட களிப்பூட்டும்
அத்தர்கள் உண்டு.
அவள் பேசக் கேட்பதில்
பெருவிருப்பம் எனக்கு.
ஆனாலும் இசையின் ஓசை
அதைவிட பேரின்பம் அன்றோ?
தேவதைகள் நடந்து பார்த்தில்லை.
ஒத்துக்கொள்கிறேன்.
என் காதலி நடை பயிலும்போது
கால்கள் தரையில் பதிகின்றனவே!
போலி ஒப்பீடுகளை அவள் மறுதலிக்கிறாள்.
ஆயினும் சத்தியமாய் சொல்கிறேன்
அவள் அரிதினும் அரிதானவள்.

Exit mobile version