
1950,60களில் வங்காளம் பல தொழில்களில் முன்னணியில் இருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். வேதிப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் மற்றும் பொறியியல் சம்பந்தப்பட்ட தொழில்களில் அது பெயர் பெற்றிருந்தது. கல்கத்தா மற்றும் ஹவுராவைச் சுற்றியும் மிகப்பெரிய உப்பளங்கள் பெருமளவில் இருந்தன. இந்தியாவின் முதல் கணிப்பொறி நிறுவப்பட்டது பி.டி. ரோடிலிருக்கும் இந்திய புள்ளியியல் கல்விநிறுவனத்தில்தான். கைத்தறித்தொழில் மிகச் சிறப்பானதாகவும், சாயமேற்றும் தொழில்திறன் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் இருந்தன.
ஆனால், பிரிவினையின்போது அலைஅலையாக அகதிகளின் வருகை நிகழ்ந்தது;கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பலர் இடதுசாரிக் கொள்கையைத் தழுவினர். ஒடுக்கப்படுவதாக ஏற்பட்ட ஒருவித உணர்வானது தில்லிக்கு எதிரான உணர்வாகத் திரும்பியது. உண்மையில், வங்காளத்தின் இடதுசாரி சித்தாந்தம் என்பது சித்தாந்த முலாம் பூசப்பட்ட பிராந்தியக்குரல்தான்.நாட்டின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டதை அறிவுஜீவிகளான பல பெரியமனிதர்கள் வங்காளத்திற்கு எதிரான பாகுபாட்டின் ஆரம்பமாக நினைத்தார்கள்.
தொழிலதிபர்களை ஒடுக்குமுறையாளர்களாகவும், தொழில் முனைவோரை இரக்கமில்லாதவர்க்ளாகவும் சித்தரித்தது அரசியல் வர்க்கம்; எழுபதுகளிலிருந்து அங்கு நடைபெற்றத இடதுசாரிகளின் ஆட்சியில் இந்தப் பாகுபாடுகள் தீவிரமானது; RPG, பங்குர் போன்ற பழமையான தொழில்குழுமங்களைத் தவிர மற்ற தொழிலதிபர்கள் வங்கத்தைத் தவிர்க்க ஆரம்பித்தனர். புதிய தொழில் முயற்சிகள் இந்தியாவின் மேற்குப் பகுதியை நோக்கிச் சென்றுவிட்டன. சிங்கூரில் டாடா துவங்கவிருந்த கார் தொழிற்சாலையை வரவிடாமல் விரட்டியடித்த த்ரிணமுல் காங்கிரஸோ “வங்காளம் ஒடுக்கப்படுகிறது” என்ற ஒப்பாரியை உச்சத்திற்கு கொண்டுசென்றது. அந்தப் போராட்டத்தை விவசாயத்திற்கும், இரக்கமற்ற தொழிலதிபர்களுக்கும் இடையேயான போராட்டமாகச் அது சித்தரித்தது. பின்னர் அந்தத் திட்டம் அங்கு கைவிடப்பட்டதும், குஜராத்திற்கு மாற்றப்பட்டதும் நாடறிந்த விஷயம்தான்.
தற்போது சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவெனறால், முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிலும் ’ஒடுக்கப்படுகிறோம்’ என்ற ஒரு கோஷம் எழுவதுதான். வேறு வழியின்றி,பல அரசியல் கட்சித்தலைவர்களும் இதே கோஷத்தைப் போட வேண்டியுள்ளது.
கூடங்குளம் ஒரு மிகப்பெரிய அளவிலான அணுமின்நிலையத் திட்டம். வெளிநாட்டு நிதியுதவியுடனும், சர்ச்சின் ஆதரவோடும் போராட்டம் நடத்திய NGOக்களால், இந்த திட்டம் பல ஆண்டுகள் முடக்கப்பட்டதால், திட்டத்தின் செலவுத்தொகை ரூ.ஆயிரம் கோடிக்கும் மேல் அதிகரித்தது. அப்போதைய பிரதமரான, பொறுமையானவர் எனப்பட்ட மன்மோகன் சிங் அவர்களே கூட இந்த முட்டாள்தனமான பிடிவாதத்தைக் குறித்த தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து ஏற்பட்ட ஜல்லிக்கட்டு பிரச்னையிபோதும் தில்லிக்கு எதிரான உணர்வு தூண்டப்பட்டது. த்ற்போது, அந்த வரிசையில் சேர்ந்தது நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம். சமீபத்தில் நடந்து முடிந்த சிறிய நிலத்தடிவயல்களின் ஏலத்தில், காரைக்கால் மற்றும் நெடுவாசல் ஆகிய இரண்டு ஒப்பந்தப்பகுதிகள் தனியாருக்கு அளிக்கப்பட்டன.இவ்விரண்டு பகுதிகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுவின் மொத்த உள்ளிருப்பு 4,30,000 டன்களாகும். தற்போதைய மதிப்பீட்டின்படி, இவ்விரண்டு பகுதிகளிலிருந்து மாநில அரசுகளுக்கு ரூ.300 கோடி மொத்த வருமானமும்,ராயல்டி வகையில் ரூ.40 கோடியும் கிடைக்கும்.ONGC ஓஎன்ஜீசீ மாநில அரசுக்கு ராயல்டியாக வருடத்திற்கு ரூ.250-350 கோடி கொடுத்துக்கொண்டிருக்கிறது.
மாநில அரசுக்கு இத்திட்டம் குறித்து தெரிவிக்கப்படவில்லை, ஆய்வுக்கோ,ஏலத்துக்கோ மாநிலஅரசிடம் முன்னனுமதி வாங்கவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் மறுக்கின்றனர்.
”சுரங்கங்கள் குத்தகைக்கு மாநில அரசு அனுமதி வழங்குகிறது;இது ஏற்கெனவே கண்டறியப்பட்ட ஒரு சுரங்கப்பகுதி-எண்ணெய் வளஆய்வு முடிந்துவிட்டது.; மாநில அரசுக்கு இது முன்பே தெரிந்த்துதான்”.
ஒரு அதிகாரி சொன்னதாக ஊடகங்களில் வந்த செய்தி:
’ “இந்தப்பகுதியானது எண்ணெய் வளஆய்வுக்கான லைசன்ஸின் கீழ் 1986ல் ONGCக்கு அளிக்கப்பட்டது. ஆய்வுக்கு 2008ல் மாநில அரசு அனுமதி வழங்கியது;சுரங்கக்குத்தகை 2013ல் ஏழு வருட காலத்திற்கு வழங்கப்பட்டது. இந்த குத்தகைக்காலத்தை 20 வருட காலத்திற்கு நீட்டிக்குமாறு கோரி நெடுவாசலின் மாவட்ட நிர்வாகதிற்கு 2016,டிசம்பர் 30 அன்று ONGC கடிதம் எழுதியுள்ளது. இந்த்த் திட்டக்காலம் முழுவதும் மத்தியிலிருந்த காங்கிரஸ், திமுக அமைச்சர்கள் அனுமதி வழங்கியே வந்திருக்கிறார்கள்;ஆனால், தற்போது இந்த போராட்டக்காரர்களோ மோடி ராஜினாமா செய்யவேண்டும் என்கிறார்கள்.இத்தகைய ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தமிழகத்துக்கோ, தஞ்சைக்கோ புதிதல்ல. ஏற்கெனவே 100க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசு பற்றிய கவலைகள் தொடங்கி வளமான விவசாய நிலங்களை அபகரிக்கும் மத்திய அரசின் சூழ்ச்சி என்ற அபத்தமான கூற்று வரை இந்தத் திட்டத்தை எதிர்த்து வாதங்கள் தரப்படுகின்றன. துளையிடுவதற்கும், உற்பத்திக்கும் மிகக் குறைந்த நில அளவே(120 X 120 ச.மீ) தேவை;அது விவசாயத்தையோ,மண்ணையோ பாதிக்காது;உபயோகத்திலுள்ள நிலத்தின் மற்ற பயன்பாட்டுக்கு மிக்க் கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறைகள் உள்ளன; நிலத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் ஆழத்திலிருந்துதான் ஹைட்ரோகார்பன் எடுக்கப்டுவதால், இத்ற்கு மிகவும் உயர்ந்த தளங்களில் இருக்கும் நிலத்தடி நீர்படுகைகளுக்கு பாதிப்பில்லை.”
இந்த பிரச்னைகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு விஞ்ஞானிகள்/அதிகாரிகள் நெடுவாசல் போகும்போதெல்லாம் அவர்கள் முற்றுகையிட்டு, மிரட்டப்படுகிறார்கள். இந்த ’ஒடுக்கப்படுகிறோம்’ என்ற ஒப்பாரி உச்சத்தை எட்டி, தற்போது தொழில்வளர்ச்சிக்கு எதிராகத் திரும்பிவிட்டது. இதற்கு ஆதரவானவர்களாலும், உள்ளூர் அமைச்சர்களாலும் சொல்லப்படும் வாதம் – உள்ளுர் மக்கள் வேண்டாம் என்று சொன்னால், திட்டம் செயல்படக்கூடாது – இது அபாயகரமானது. இது ஜார்கண்டிலோ, சத்திஸ்கரிலோ பின்பற்றப்படலாம். எந்த சுரங்கத் தொழிலும் ஆரம்பிக்க முடியாது. சொல்லப்போனால், பூமிக்கு கீழே உள்ள எல்லா வளங்களும் மொத்த இந்திய சமூகத்தைச் சேர்ந்தே தவிர உள்ளூர் மக்களுடையதல்ல.
ஏற்கெனவே, புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படாததாலும்,மத்தியகிழக்கு பகுதிகளில் நிலவும் சூழலாலும், ஐடி தொழிலில் ஏற்பட்டுள்ள சரிவாலும் தமிழ்நாடு வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ளது.இங்குள்ள கட்சிகளோ, இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக மொழிவெறியையும், தில்லிக்கு எதிரான உணர்வையும் தூண்டுகிறார்கள். இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம்-காட்டுக் கொள்ளையன் வீரப்பனை ஆதரித்த சக்திகள் எல்லாம் கூடங்குளம்,நெடுவாசல் போராட்டங்களில் தீவிரமாக பங்கெடுப்பதுதான். அமெரிக்கா,ஐரோப்பா நாடுகளிலிருந்து நிதி பெறும் பல என்ஜீஓக்கள் இப்போராட்டங்களில் மிகவும் ஈடுபட்டுள்ளன.
மொத்தத்தில், தமிழ்நாடு வ்ங்கத்தைப் போன்றதொரு நிலைமையில் உள்ளதால், தொழிலதிபர்கள் இம்மாநிலத்தைத் தவிர்ப்பார்கள்;இதனால் இந்த ’ஒடுக்கப்படுகிறோம்’ என்ற எண்ணம் மேலும் அதிகரிக்கும். ஏற்கெனவே, எல்டிடிஈ போன்ற திவிரவாதக்குழுக்களின் ஆதரவில் தமிழ்நாட்டில் பல பிரிவினைசக்திகள் உள்ளன. பெருந்தீயாக மாறக்கூடிய தீக்கங்குகள் கன்ன்றுகொண்டிருக்கின்றன.
***
