ஆக்சிஜன் கலனை தொட்டதும் முதலில் நடந்தது போல அதே உணர்வுகள் வேறு வார்த்தைகளில் கேள்விகளாக எழுந்தன, கலனை விட்டுவிட்டு கீழே வந்தேன், வீட்டுக்குள் போக முடியாமல் அங்கேயே தயங்கி நின்று மாடிக்கு ஏறினேன். கலனை பார்த்ததுமே முட்டாளை போல உணர்வேன்.மாடியிலிருந்து கீழே இறங்கியவுடன் இழிவாக உணர்ந்து மறுபடியும் மேலே மாடிக்கு வேகமாக ஏறுவேன், மேல்படியிலிருந்து மாடிக்கு கால் வைத்ததுமே அப்படியே திரும்பி கீழிறக்கினேன், கீழே கடைசிப்படியை மிதித்ததுமே திரும்பி மேலேறத் துவங்கினேன். அதே எண்ணச்சுழல் ஆனால் வேறு வேறு வார்த்தைகள். அப்புறம் அதே வார்த்தைகள் அதே சுழல், பெரிய வட்டமாக ஆரம்பித்த அந்தச்சுழல் நேரம் போகப்போக சிறிதாகியிருக்கவேண்டும்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed