சகுனங்களும் சம்பவங்களும் – 1

உளநோய் மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட் என்பாரும் இறையியல் நிபுணரும் ஆங்கில எழுத்தாளரும் ஆன “நார்னியாவின் காலவரிசைக்கதைகள்” (Chronicles of Narnia) எழுதிய சி.எஸ்.லூயிஸ் என்பாரும் சந்தித்துப் பேசிக் கொண்டால் எதைப் பற்றியெல்லாம் உரையாடி இருப்பார்கள்? கடவுள் இருக்கிறாரா? இருந்தால் உலகப் போர்களைத் துவங்க ஆசீர்வதித்து இருப்பாரா? மகள் தந்தையை கவனிப்பதும், நண்பனின் அன்னையை பாதுகாப்பதும் – எல்லாமே காமத்தின் அடிப்படையில் தானா?