
01) காத்திருக்கிறேன்
பூனையும் காத்திருக்கிறது
அம்மாவின் சமையலுக்காக
02) அதிகாலை குளிர்
சேவல் கூவவில்லை காதில்
கத்தியது மியாவ்
03) தொலைகாட்சி ஓட
செல்போனில் ஒளியின் ஒலி
புத்தகத்தில் மூழ்கிவிட்டேன்
04) சிறகுகள் முளைத்த குருவிகளிடமிருந்து
விடை பெற்றது
குருவிக்கூடு
05) பகலில் வாடுகின்றன
சூரிய கதிரில்
இரவில் உறைகின்றன
பனிப்பொழிவில்
பூக்கள்
6) காலையில்
குருவிகளின் இசை
மாலையில் மக்களின் சப்தம்
சந்தையில்
7) மேய்ச்சலுக்கு சென்ற முயல்கள்
புல்வெளியில் நனைந்தன
பனித்துளிகள்
8) நண்பர்கள் விட்டு
சென்ற நேரம் ஆறுதலாக
புத்தகங்கள்
9) உரையாட யாரும்
அங்கு இல்லை தனிமையில்
பேருந்து நிழற்குடை
10) அதிவேகமாய் ரயில்
சத்தத்துடன் பறவைகள்
போனில் மூழ்கிய சிறுவன்
