Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

மகரந்தம்


[stextbox id=”info” caption=”இருட்டடிக்கப்படும் இந்திய ராணுவத்தினரின் சேவை”]

இந்த ஒலிக் கோப்பின் இறுதியில் இந்தச் செய்தியாளர் உலக அமைதியைக் காக்கும் காவல் படைவீரர்கள் என்ற பெயரில் காங்கோவிலும் இதர நாடுகளிலும் பணியாற்றும் இந்தியப் படை வீரர்களை யாரும் கவனிப்பதில்லை. அமெரிக்க/ பிரிட்டிஷ் துருப்புகளைப் போல இவர்களுக்குப் பெரிய விளம்பரமோ அங்கீகாரமோ கிட்டுவதில்லை. நாமாவது ஒரு கோப்பைத் தேநீரை இவர்களைப் பெருமைப்படுத்த உயர்த்துவோம்! என்கிறார்.

அத்தகைய இருட்டில் இவர்கள் இருக்க இந்திய அரசும், இந்திய ராணுவமும் கூடத்தான் காரணகர்த்தாக்கள். நம் ஊடகங்களும், நாமும் கூடத்தான். எப்போதும் இந்திய ஊடகங்கள் நம் காவல் துறையினரையும், ராணுவத்தையும் தாக்கும் செய்திகளையும், காயப்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படும் செய்திகளையும்தான் பிரசுரிக்கின்றன. இவை முழுதும் ஊழலும் பொய்மையும் நிறைந்த அமைப்புகள் என்றுதான் தொடர்ந்த இந்திய இடதுசாரியினரின் பிரச்சாரம் ஊடக வெளியை நிரப்புகிறது. இந்திய அரசைக் கவிழ்ப்பது தம் முழு நோக்கம் என்று சொல்லி இயங்கும் இந்தக் கோமாளிகளின் பிரச்சாரத்தை நம்பி இந்தியப் பிரஜைகள் வாழ்வது நம் சமுதாயத்தின் விழிப்புணர்வு முற்றிலும் மங்கி விட்டிருப்பதையே சுட்டும்.

http://www.theguardian.com/world/audio/2010/feb/01/indian-soldiers-un-congo
[/stextbox]


[stextbox id=”info” caption=”லத்தின் அமெரிக்க ஊழல்கள் பற்றிய ஒரு துப்பறியும் நாவல்”]

பெரு நாட்டு எழுத்தாளரான மாரியோ வர்காஸ் ல்லோஸா சமீபத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். அது ஓரு துப்பறியும் நாவலை ஒத்த அமைப்பு கொண்டது என்றாலும், பெருவின் சமூக அடுக்குகள் பற்றியும், அந்நாட்டில் நிலவும் பற்பல ஊழல்களைப் பற்றியும் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அப்புத்தகம் பற்றியும், ல்லோஸாவின் இதர புத்தகங்கள் பற்றியும் ஒரு பக்கக் குறிப்பை ஒரு பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ் அளவு உலகப் பிரசித்தம் பெறாவிட்டாலும், லத்தின் புனைவுகளைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு ல்லோஸாவின் புதினம் நிச்சயம் தெரிந்திருக்கும். அந்த அளவு பிரசித்தி பெற்றவரே.

இவரும் ஃப்லாபேர் பற்றியும், மாடம் போவரி பற்றியும் ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார். (சென்ற இதழ் சொல்வனத்தில் ஜூலியன் பார்ன்ஸ் இந்த விஷயத்தைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை வெளியாகி இருந்ததை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறோம்.)

http://www.thedailybeast.com/articles/2015/05/12/welcome-to-the-dark-side-of-peru.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”வேலையில்லா பேராசிரியர்”]

இந்தியப் பல்கலைகளில் ஏராளமான ‘பேராசிரியர்கள்’ முன்னெப்போதும் கிட்டாத அளவு ஊதியத்தோடு உலவுகிறார்கள். இவர்களில் கணிசமான எண்ணிக்கை வெறும் அரசியல் பலத்தால் பதவியைப் பெற்றவர்கள். பலர் வேறு, கல்வித் தகுதியோடு சம்பந்தப்படாத, காரணங்களால் பதவிகளைப் பெறுகிறார்கள் என்றும் வதந்திகள் உலவுகின்றன. இது பற்றி வாசகர்களுக்குக் கிட்டும் தகவல்கள் சொல்வனம் பதிப்புக் குழுவுக்குக் கிட்டும் தகவல்களை விடப் பன்மடங்கு கள நிலைக்கு அருகிலானதாக இருக்கும். தான்பாதுக்குக் கரி சுமந்து போக வேண்டாம் என்பதால் இந்தத் தகவல்கள் பற்றிப் பேசப் போவதில்லை.

இப்படி மக்களிடம் இருந்து அடாவடியாகப் பறித்த வரிப்பணத்தை எல்லாம் இந்தியாவின் பல அரசுகள் வியர்த்தமாகச் செலவழித்துக் கொண்டிருக்கையில் அமெரிக்கா தன் பேராசிரியர்களை எப்படி நடத்துகிறது என்று பார்ப்போமா?
அங்கு கணிசமான எண்ணிக்கையுள்ள துவக்க நிலைப் பேராசிரியர்கள் தம் வாழ்வுக்கான வருமானம் கிட்டாததால், வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்களின் உணவு உதவி மையங்களில் போய் உண்ணுகிறார்களாம், பொது மருத்துவ நிலையங்களில் வருமானமில்லாதோருக்கான மருத்துவ வசதிகளுக்கு வரிசையில் நிற்கிறார்களாம்.
ஆனால் இதனால் அமெரிக்க அரசோ, பல்கலைகளோ தம் பெரும் நிதியை மிகக் கணக்குப் பண்ணி ஒழுங்காகச் செலவழிக்கிறார்கள் என்று நினைக்க முடியுமா என்றால் நிச்சயம் இல்லை. எல்லா நாடுகளிலும் அதிகாரிகளும், அரசியலாளர்களும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் அட்டைகள்/ ஒட்டுண்ணியாக இருப்பதே சகஜம். இந்த ஒட்டுண்ணி குணமில்லாது உள்ள சிலர் அதிகாரத்துக்கு வருவது சுலபத்தில் நடக்குமா என்ன?
அங்கும் ஏராளமான நிதி கல்வியோடு உடனடியாகச் சம்பந்தமில்லாத விஷயங்களுக்கே செலவிடப்படுகிறது. இதில் நம் நாலந்தா பல்கலையின் அபத்தச் செலவுகள் ஏன் எழுந்தன என்பது நமக்குப் புரிய வாய்ப்பிருக்கிறது. அமெரிக்கப் பல்கலைகளில் பயின்ற பாடங்களையே அமர்த்யா சென்னும் அவரது சீடர்களும் நாலந்தா பல்கலையில் பழகிப் பார்த்திருக்கிறார்கள் என்று ஊகிக்கலாம். அதுதான் ஆயிரம் கோடிகள் செலவழித்த பின் கிட்டி இருப்பது நோஞ்சானான ஒரு கட்டிடமோ இரண்டோ. தவிர ஏதும் செயல் திறனே இல்லாத ஒரு பல்கலை.

http://goo.gl/CyekTh
[/stextbox]


[stextbox id=”info” caption=”பாலைவனம் ஆகும் விளைநிலம்”]

கடந்த நூற்றைம்பது வருடங்களாக அமெரிக்காவின் மேற்குப் புற மாநிலங்களில் ஏராளமான நகரங்கள் கட்டப்பட்டு, பெரும் மக்கள் திரள் அங்கு குடியேறியது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் இந்த மக்கள் திரள் சேர்ந்தது. இந்தத் திரள் நகரங்களில் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், கலிஃபோர்னியாவைப் போன்ற அரைப் பாலை நிலங்களில் திசை திருப்பிக் கொணரப்பட்ட பெரும் ஆற்று நீரை வைத்து பெருமளவில் விவசாயம் நடந்தது. அமெரிக்காவில் இன்று விற்கப்படும் ஏராளமான காய்கறிகள், பழ வகைகளில் பெரும்பாலானவை கலிஃபோர்னியா அல்லது அது போன்ற மேற்குப் புற மாநிலங்களில் விளைந்தவை. சமீபத்தில் உலகெங்கும் திடீரென்று மாறி வருகிற தட்ப வெப்ப நிலைகளால் குளிர் காலத்தில் பெய்கிற பனி இப்போது பல வருடங்களாகப் பெய்வதே இல்லை அல்லது வேறேதோ நிலப்பகுதிகளில் அளவு மீறிப் பொழிந்து விட்டு, வழக்கமாகப் பெய்யும் பகுதிகளில் சிறிதும் பெய்வதில்லை. மழையும் இப்படியே பருவம் மாறிப் பெய்வதோடு, பல நூறு மைல்கள் தள்ளிப் பெய்கிறது.

இவற்றால் மேற்குப் பகுதி மாநிலங்களில் வாழ்வு மிகவும் நிலை தடுமாறி இருக்கிறது என்று இந்தச் செய்தி சொல்கிறது. குறிப்பாக பாலை நிலம்தான் இந்தப் பகுதி, இதை விட்டு நீங்குவதுதான் புத்திசாலித்தனம் என்று சொல்கிறது இது.

http://goo.gl/RtaFcO
[/stextbox]

 

Exit mobile version