குருவி

எல்லாம் கச்சிதமாய் நேர்த்தியாய் இருக்கவேண்டும் சதாசிவனுக்கு. வீடு பளபளவென்று மின்னவேண்டும், தேடினாலும் சின்ன தூசிக்கூட தென்படக்கூடாது. பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருந்தால் அவை அந்தந்த இடத்தில் இருக்கும் என்பது அவனுடைய சட்டம். தொலைப்பேசி இடதுகையால் எட்டும் இடத்திலேயே இருக்கவேண்டும். அதிலிருந்து ஓரடி இடம் விட்டு சின்ன அலமாரி. இடதுகோடி மூலையில் சின்னதாய் பேனாக்களுக்கான ஸ்டாண்டு. அது ஒரு இஞ்ச் கூட நகர்ந்திருக்கக்கூடாது. அப்புறம் திவான், சோபா. டீப்பாய், பேப்பர் எல்லாம் அளவு எடுத்து கோடுபோட்டு வைத்தது போல அதனதன் இடத்தில் இருக்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை…

முடிவு

அப்படிப் பார்த்தால் அவள் முதலில் இங்கு வந்ததே தகராறில்தான். மகாராணி புயலைக் கிளப்பிவிட்டாள். யாரோ ஒரு வாசகன் நீளமாக ‘கதை நன்றாக இருக்கிறது. சூட்சுமமாக இருக்கிறது…’ அப்படி இப்படி என்று கடிதம் எழுதியிருந்தான். அப்போதுதான் அதைப் படித்து முடித்திருந்தேன். நடராஜும் அதைப் படித்துவிட்டு பெருமையுடன் தலை அசைத்துவிட்டு அப்போதுதான் வெளியே போயிருந்தான். இவள் உள்ளே வந்தாள். என்னவோ தனக்கே வந்தது என்பதுபோல கடிதத்தைப் படித்து உதட்டை சுழித்தாள். “சரி… இன்னும் இதே மாதிரி நாலு கதை எழுதிவிட்டு ஜனப்ரிய எழுத்தாளர் னு போர்ட் போட்டுடலாம்” என்றாள்.