சிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள் (பகுதி 2)

திராவிட மொழி – குறிப்பாகக் கன்னடமும் தமிழும் ஹரப்பன் மொழியாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு கருதுதற்கு ஏதுவாக இருப்பனவற்றுள் ஒன்று, எட்டு என்ற எண் ஹரப்பன் நாகரிகத்தில் அடிப்படை எண்ணாக இருப்பதும் ‘எண்’ என்ற தமிழ் – கன்னடச் சொல், எட்டு எட்டாக எண்ணும் முறையே தொடக்கத்தில் நிலவிய முறை என்பதை உணர்த்துவதும் ஆகும். மற்றொன்று தானியங்களுள் ஒரு வகையின் பெயரும், திங்களைக் (சந்திரனையும், மாதத்தையும்) குறிக்கும் பெயரும் (நெல், நிலா என்பன) தொடர்புடைய பெயர்களாக இருப்பது.

சிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மறைந்த அறிஞர் கமில் சுவலபில் (Kamil V. Zvelebil) செக்கொஸ்லொவாக்யா நாட்டில் பிறந்தவர். ப்ரேக் நகரின் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியவியலை முக்கியப் பாடமாகப் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் திராவிட மொழியியல் சொல்லித்தரும் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

மொழியியல் மற்றும் இலக்கியம் பற்றி இவர் எழுதியுள்ள நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாகும்.

சிந்துவெளி எழுத்துகள் பற்றி, 1983ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆய்வரங்கம் ஒன்றில் கமில் சுவலபில் வாசித்தளித்த கட்டுரையின் தமிழாக்கத்தை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.