திபெத் எப்படி நசுக்கப்படுகிறது?

திபெத்திய தேச அடையாளத்திற்கு மையமாக இருக்கும் மொழி மற்றும் பௌத்தம் ஆகியன, சீனாவின் பாதுகாப்பு, மேலும் அரசு முன்னின்று செலுத்தும் தேசியத்துக்கும், பரவலாக ஏற்கப்பட்டுள்ள ஹான் இன உயர்வு சார்ந்த தேசியத்துக்கும் சிறிதும் ஏற்க முடியாததாக உள்ளதால், மாநில மற்றும் நாட்டு அதிகாரிகள் நடுவேயும், சாதாரணச் சீனரிடையேயும் இவற்றுக்கு எதிரான காழ்ப்புணர்வு அதிகமாக உள்ளது… சீன ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் ‘கரைத்து விடுதல்’ என்ற அணுகல் முறைப்படி, 1950 இலிருந்து திபெத்தின் மீது சுமத்தப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சியும், அதிலும் 1989க்குப் பிறகு வந்த கால கட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற கடும் ஒடுக்கு முறைகளும் பண்டை நாளில் இருந்த நல்லுறவை நொறுக்கி விட்டன.

திபெத் எப்படி நசுக்கப்படுகிறது- தலாய் லாமாவின் வாழ்நாளிலேயே

திபெத்தில் எதிர்ப்பாளர்களை வெளி உலகில் அர்த்த புஷ்டியோடு ஆதரிக்கும் ஒரு குரலாக ஓஸரின் குரல் இருக்கிறது. அதே போல, தனக்கு மிக்க ஆபத்து வரும் என்ற போதும், சீனாவின் ஒரே நோபெல் அமைதிப் பரிசை வென்றவரான லியு ஷியாஓபோ வை சிலாகித்துப் பேசி இருக்கிறார். ஒருக்கால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார அடுக்கில் இவருக்கு இருக்கும் யாரோ சில சக்தி வாய்ந்த ஆதரவாளர்களால்தான் இவர் சிறையில் அடைக்கப்படாமல் தப்பி இருக்கிறாரோ என்னவோ.