திராவிட-ஹரப்பன் தொடர்பு? ஆய்வுமுறைச் சிக்கல்கள்

சிந்து நாகரிகம் மீதான திராவிடர்களின் உரிமை குறித்த கருத்துக்கள், ஆரிய படையெடுப்புக் கோட்பாடு குறித்த காலனிய ஆராய்ச்சிகளின் எஞ்சிய மிச்சங்களே. ஆரிய படையெடுப்பு குறித்த ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக விளங்குவதால் இன்று வரை இவை உயிர்ப்புடன் உள்ளது. ஒரு சில சித்தாந்தங்களின் துணையுடன் இந்த ஆராய்ச்சிகள் அசைக்க முடியாத தூணைப் போல் நிறுவப்பட்டுள்ளது. “ஆரிய இனம்” அல்லது “திராவிட இனம்” என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை. எப்போதும், அந்த கருத்துருக்களுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் அளிக்க முயலும் யாரும், அத்தகைய ஒன்று என்றுமே இருந்ததில்லை என்பதை வெகு விரைவில் கண்டுகொள்கிறார்கள்.