விலைக்குமேல் விலை

This entry is part 16 of 17 in the series 20xx கதைகள்

அப்படி மூன்று மாதம் செய்ததின் முடிவு, வாங்குகிறவர்களின் கையோங்கி இருந்ததால் அதன் மதிப்புக்கு பதினைந்து இருபது சதம் குறைவாகத்தான் வீடு விலைபோகும். எதற்கு நஷ்டப்பட வேண்டும்? வெளிப்புறத்தில் புல்வெட்டவும் இலை வாரவும் ஒரு பணியாளன். வீட்டிற்குள் அவள் புழங்கும் இடத்தை அவளால் சுத்தமாக வைக்க முடியும்.
“வேலைக்குப் போற வரைக்கும் இங்கியே தனியா இருந்துடறேன்.”

மிகப்பெரிய அதிசயம்

This entry is part 12 of 17 in the series 20xx கதைகள்

“நிகழ்காலம் பிடிக்காவிட்டால் எதிர்காலத்தை மாற்றி அமைக்க திட்டம் தீட்டுகிறோம்.”
“முன்னேற்றம் என்று நாம் சொல்லும் அத்தனைக்கும் அது காரணம்.”
“எதார்த்தத்தை மறுத்து நமக்குப்பிடித்தமான கற்பனையை நிஜம் என நம்புகிறோம். அளவுக்கு மிஞ்சிய சத்தில்லாத உணவும் சோம்பல் வாழ்க்கையும் மற்றவர்களுக்கு மட்டுமே நோய் நமக்கு இல்லை என நினைக்கிறோம். நிறுவப்பட்ட அறிவியல் கொள்கைகளில் பெரும்பாலோருக்கு அநாவசிய சந்தேகம்.”

20xx- கதைகள்: முன்னுரை

This entry is part 1 of 17 in the series 20xx கதைகள்

நிலக்கரி சக்தியில் ஐரோப்பியர்கள் வராது இருந்தால், நிலையான கிராம வாழ்க்கையும் அரசாட்சிகளின் ஏற்ற இறக்கங்களும் இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்திருக்கும். இது ஒரு ஆதரிச சமுதாயமா? இல்லை. இரண்டாயிரம் காலரி உணவு எல்லாருக்கும் நிச்சயம் இல்லை. அவ்வப்போது ‘ஓர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டிலே நெல்லும் ஒக்க விற்கும் கார்தட்டிய பஞ்சகால’ங்கள். பயிர்விளைவிப்பதின் பெரும்பளுவைப் பள்ளர்கள் சுமந்தார்கள். எழுத்தறிவு மக்களில் ஐந்துசதம் பேருக்கு இருந்தால் அதிகம். அவர்களில் உயர்குடியைச்சேர்ந்த ஒருசில பெண்கள். விதிக்கப்பட்ட வாழ்க்கைப்பாதையில் இருந்து விடுபடுதல் அரிதான செயல். ஆனால், இன்றைய மத்தியக்கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பகுதியின் பல நாடுகளில் மக்கள் படும் அவதியுடன் ஒப்பிட்டால் அந்தத்தமிழகம் ஒரு சொர்க்கம். முக்கிய காரணம், வறுமையிலும் மனிதாபிமானம் அழிந்துவிடாமல் பாதுகாத்த கொள்கைவீரர்கள்.

அவர் வழியே ஒரு தினுசு

This entry is part 10 of 17 in the series 20xx கதைகள்

“மார்க்கெட்டிங். இந்தியாவில் சத்து இல்லாத செயற்கை சாப்பாட்டை விற்க எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற தலைப்பில். சென்னை டிவியில் சோடா, சாக்லேட், சிப்ஸ் இதுக்கெல்லாம் எவ்வளவு கமர்ஷியல்! கையில் கொஞ்சம் காசு சேர்ந்ததும் இட்டிலி, லட்டு, காப்பிக்கு பதிலாக வெள்ளை ப்ரெட், டோநட், கோலா. அதானல உடல் பருமன், இதய பலவீனம், இரத்தத்தில் சர்க்கரை.”

2019- ஒரேயொரு டாலர்

This entry is part 6 of 17 in the series 20xx கதைகள்

கட்டுரை வெளிவந்தபிறகு அதைத்தாக்கி வாசகர் கடிதங்கள். எழுதியவன் சோம்பேறிப் பொதுவுடமைவாதி. இங்கே பிடிக்கவில்லை யென்றால் வெனிஸுவேலாவுக்குப் போகட்டும். தனிமனிதர்களின் தோல்வி முதலீட்டுப் பொருளாதாரத்தின் தோல்வி என்ற கட்டுரையின் உள்ளடங்கிய கருத்து மேல்தட்டு மக்களின் மனசாட்சியை சுட்டிருக்க வேண்டும்.
மக்களின் எதிர்ப்புக்கு பயந்து அவன் எழுத்தைத்தொட பத்திரிகையாளர்கள் பயந்தார்கள்.

2015: சட்டமும் நியாயமும்

This entry is part 4 of 17 in the series 20xx கதைகள்

“என் பணத்தைத் தொடாதே என்று தடை போடுவது ரொமான்டிக் காதலைக் கொன்றுவிடும், ஒப்புக்கொள்கிறேன். கல்யாண தினத்தில் இருந்து அது முடிகிறவரை – எந்தத் திருமணமும் முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும் – இருவரும் குடும்பப் பொறுப்புகளைப்போல வருமானத்தையும் பகிர்ந்துகொள்வதும் நியாயம். ஆனால், அதற்கு முன்பும், பின்னாலும் வரும் செலவுகள் அவர் அவர் பொறுப்பு. இதை எழுத்தில் பதிப்பது எப்படி தவறாகும்?”

2013 – இன்றே, இப்பொழுதே

“முதல்ல ஆணும் பெண்ணுமா ரெண்டு இளவட்டங்கள். தங்கற இடம், சாப்பிடற இடம், தினப்படிக்கு மூணுவேளை முழுசாப்பாடு, இரண்டு காப்பியோட நொறுதீனி, எல்லாம் காட்டினாங்க. அந்த இடத்திலயே அவசரம்னா ஒரு வயசானவங்க டாக்டர். இருபத்திநாலு மணி நேரமும் இரண்டு நர்ஸ்கள். ஹார்ட் அட்டாக் மாதிரி எமர்ஜென்ஸிக்கு உடனே ஏபெக்ஸ் மெடிகல் காம்ப்ளெக்ஸுக்கு எடுத்துட்டுப்போக தயாரா ஒரு வேன்.”
எல்லா சௌகரியங்களையும் சேர்த்துப் பார்த்தபோது பணக்காரர்களுக்கான காப்பகம் போல சாமிக்குத் தோன்றியது.

2024 /எத்தனைகோடி இன்பம் வைத்தாய்!

சரவணப்ரியா கணக்கிட்டபடி மருத்துமனையைச் சுற்றி வாழ்ந்தவர்களின் நிதிநிலமை வேகமாகத் தாழ்ந்துபோனது. தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இருபதில் இருந்து முப்பத்தைந்து வரையிலான இளைஞர்களை சந்திரா நன்றாக அறிவாள். கல்லூரிக்குப் போனது இல்லை. நிரந்தர வேலை என்று ஒன்றும் கிடையாது. நின்றுபோன தொழிற்சாலையில் இருந்து சாமான்களை பெயர்த்துவந்து விற்பது, பண்ணைகளில் களை பிடுங்குதல் அறுவடை காலத்தில் உதவி, சொந்தவீடு வைத்திருக்கும் ஒருசில அதிருஷ்டசாலிகள் வீடுமாற்றினால் சாமான்களைச் சுமப்பது, சுவர்களுக்கு வர்ணம் பூசுவது. இந்நிலையில், இன்னொரு உயிரைக் கொண்டுவர எப்படி ஆசை இருக்கும்?

ஜனனமரணம்

கற்றதைப் பயன்படுத்தி நாங்கள் செய்யும் முயற்சிகளில் எப்போதாவது ஒன்றிரண்டு நல்ல சேதிகள் – அழியக்கூடிய நிலையில் இருந்த வழுக்கைக்கழுகு இனத்தின் எண்ணிக்கை பெருகிவருகிறது. ஆனால், தினமும் நாங்கள் சந்திக்கும் சோகசித்திரங்கள் – வெப்பநிலையின் தீவிர ஏற்ற இறக்கங்கள், இரட்டித்துக்கொண்டே போகும் மக்கள்தொகை, பசுமைப்புரட்சி என்கிற மாயை, பொறுக்கமுடியாத ஏழ்மை, எல்லாவகையான காடுகளின் அழிவு, கனிமங்களின் இழப்பு, சூழலின் நச்சுப்பொருட்கள்.