ஜப்பானிய ஹைக்கூவின் ஒரு அம்சம் அதன் விளக்கத்தை அதன் வாசகர்களுக்கு சமர்ப்பிப்பதாகும். ஹைக்கூ அதன் வாசகர்களை அதன் அர்த்தத்தை பல்வேறு வழிகளில் விளக்க அனுமதிக்கிறது. எனவே, ஜப்பானிய மூலத்திலிருந்து வேறொரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஹைக்கூவில் அத்தகைய அம்சத்தைப் கிடைக்கச் செய்வது சற்று கடினம். மிகவும் தர்க்கரீதியான மொழிபெயர்ப்பு அசலின் அழகையும் உணர்வையும் மீட்டவோ மீட்கவோ கூட முடியாமல் தவிக்கும்.
Tag: ஹைக்கூ
ஜப்பானிய துளிப்பாக்கள்
ஹைக்கூ (Haiku) என்பது மூன்று சொற்றொடர்களில், முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் எனப் பதினேழு நேரசை நிரையசைகளைக் கொண்டு அமைக்கப்படும் ஜப்பானியக் கவிதை வடிவம். ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் எடோ காலத்தில் (கி.பி 1603 முதல் 1863 வரை) சீன ஜப்பானிய மொழிக்கலவையாகத் தோன்றி, ஹொக்கூ என்று அழைக்கப்பட்டு ஹைக்கை என்று திரிந்து, பிறகு ஹைக்கூ என அழைக்கப் படலாயிற்று
பாழ் வெளி
ஒரே
பாழ் வெளி
ஒரு மரம்
இருக்கக் கூடாதா?
வேறெதற்
கில்லையாயினும்
ஒரு வேளை
பாழ்வெளியே
“முடிவிலா பயணம்” – ஹைக்கூ கவிதைகள்
ஓயாத விழுதலிசை
வேரூறும் பாறை நிசப்தம்
மனமெங்கும் அருவி.
“அலர்தலும் உதிர்தலும்” – ஹைக்கூ கவிதைகள்
வண்டு மறைக்கும்
சிறுபூக்களின் பின் – உதிர
சிலிர்க்கும் காடு.
ஃபுகுதா சியோ-நி: நீல மலர்கள் பூத்த கொடி – தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்
ஜப்பானிய எடோ காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹைக்கூ பெண் கவிஞர். அப்போது ஹைக்கூ, ஹொக்கு என்று அழைக்கப்பட்டது… அதன் வடிவமும் சற்று வேறாக இருந்தது. தன் ஏழு வயதிலேயே ஹைக்கூ எழுதத் தொடங்கியவர். பதினேழாவது வயதில் தன் ஹக்கூக்களால் ஜப்பான் முழுக்கப் பிரபலமடைந்தார்.
கடிகாரச் சுவர் – அந்தரத்தில் கணங்கள்
கடிகாரச் சுவர்
படர்ந்த நிழல் முற்றம்
வரும் பறவை.
“தோன்றி மறையும் மழை” – ஹைக்கூ கவிதைகள்
அடர்ந்த மழை
ஊடே சிட்டுக் குருவி
மறைந்த மின்னல்.