யோகசூத்திரங்கள் துணையோடு ராஜ யோக சாதனம்

ராஜயோகத்தில் உடலையும், மனதையும் உறுதி செய்யாமல் மூச்சு பயிற்சி, தியானம் என மேலாம் படிகளில் வேகமாக ஏறினால் பல இன்னல்கள் வரும். அதனால் சாதனைகளில் முன்னேறாமல் தடைபடும்.

நோய், சோம்பல், சந்தேகம், ஊக்கமின்மை, விஷயப்பற்று, மதிமயக்கம் புலனின்பத்தில் அதிக பற்று, மனம் குவியாதிருத்தல், தவறான பார்வை, சாதனையிலிருந்து வழுவுதல், அடைந்த ஆற்றலை இழத்தல் என ஒன்பது விதமான தடைகளை யோக சாதகன் தாண்ட வேண்டும்.

யோகாப்பியாசம்: நன்மை, தீமைகள்

ஆஸ்டியோபதி மருத்துவ மன்றத்தின் யோகத்தைப் பற்றிய அறிக்கையில் குடும்பநல மருத்துவரும் குந்தலினி யோகத்தில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளருமான நெவின் சொல்வதாவது யோகப்பயிற்சியின் முக்கிய அம்சம் உடலைத் திடப்படுத்துவதும் உடலையும் மனதையும் ஒருங்கிணைப்பதுதான் என்கிறார். மேலும் ஆஸ்டியோபதி மருத்துவத்தில் வியாதி வருமுன் தடுக்கும் முறைகளுக்கே முக்கியத்துவம் என்றும் யோகப்பயிற்சியும் அதையே வலியுறுத்துகிறது என்கிறார்.