பட்டர்பி

ஆச்சி அவனை மடியில் அமர்த்தி தத்தி தத்தி நடந்தாள். “அம்மா, நீ வெளிய போகாண்டாம். நடக்கவே கஷ்டப்படுக. பிள்ளைய கீழ விட்டுறாதே. பாத்து பைய” அத்தை கூற, ஆச்சி சிரிப்புடன் “கழியாட்டி மருந்து மாத்திரை வேண்டாம். பேரன் பேத்தி வந்தா சுகமாயிடும். போட்டி, நீ அடுக்காளை வேலைய பாரு” மெதுவாய் வாசலுக்கு நகர்ந்தாள்.

சின்னையாப்பிள்ளை வீட்டு பொன்னுருக்கு

எங்கோடியா பிள்ளை சத்தமாக, “என்ன ஆசாரி வந்தாச்சா?” என்றார்.

“நா வந்து மணிக்கூறு ஆச்சி அண்ணாச்சி, நீரு தலையத் தூக்கி பாக்கலையே” என்றார் மெலிந்த உடல்காரர்.

“லேய், தவசி. உமி கொண்டு வந்தியா, பொன்ன மறக்கமாட்ட, உருக்கப்பட்டத சமயத்தில மறந்துருவியே?” சிரித்தபடி கூறினார் எங்கோடி.

என் ஆத்துமாவே தேவனை நோக்கி அமர்ந்திரு

சூப்பர்வைசரின் பார்வை வித்தியாசமாய் அவளை நோக்கியது, வாடிய பூவைப்போல இருந்தாள். மேரியின் கண்களை நேருக்குப் பார்ப்பதை எப்போதும் அவர் தவிர்த்து விடுவார். பரிதாபமான ஒளியிழந்த கண்கள். “இல்லமா, மேனேஜர் உன்னால என்னத் திட்டிட்டார். நீங்க வேணும்னா வேற வேலை பாருங்க” என்றார் அவர். இதைக் கூறும்போது அவரின் தலை கவிழ்ந்தே இருந்தது. “இல்ல சார், மன்னிச்சிருங்க இனி லீவு எடுக்க மாட்டேன்”
“சொன்னா புரிஞ்சிக்கோங்க, இப்போல்லாம் சம்பளம் குறைவா வேல பாக்க அசாம், பெங்கால் காரங்க வராங்க. நா என்னால முடிஞ்சதச் செய்றேன். நீங்களும் புரிஞ்சிக்கணும்” என்றார்.

ஒரு கொலை

“படிச்சி என்ன புண்ணியம், பிள்ளைய பரலோகம் அனுப்பவா படிக்க வச்சேன். எங்க நிலம் அணைக்கட்டு தாண்டியும் உண்டு. இந்த ரப்பர் எஸ்டேட் காரங்க எங்க நிலத்தை கேட்டானுங்க. கவெர்மென்ட்ல ஆளுங்க வந்தாங்க, காசு கீசு தாரேன்னு சொன்னாங்க. இது எங்க காடு, எப்புடி கொடுக்க. டவுனுக்கு தண்ணீ வேணும்னு பாதி காடு டேம்முக்குள்ள முங்கி கிடக்கு. இதையும் கேட்டா, எங்க போவோம். எம்பிள்ள கேசு போட்டான். சந்தோசம் எங்க ஆளுங்க எல்லாரும் பெருசா பேசுனாங்க. ஆனா இழப்பு எனக்கு தானே”