நம் மூளைகளைப் பற்றிய ஒரு ஆய்வு நம் கடந்த காலத்தைப் பற்றிய மர்மங்களை விளக்கவில்லை, மாறாக எதிர்காலத்தில் நமக்கு என்ன காத்திருக்கிறது என்று விளக்கியதை சிலர் ஓர் அங்கதமாகக் கருதுகிறார்கள். ஆனால் நாம் கடந்த காலத்தைப் பற்றியும் மதிப்பு மிக்கதாகச் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த அண்டம் ஒரு பிரும்மாண்டமான மூச்சுப் பிடிப்பு நிலையில் துவங்கி இருக்கிறது. அது ஏன் என்று யாருக்குத் தெரியும், ஆனால் காரணம் என்னவானாலும், அப்படி நடந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சிதான், ஏனெனில் என் இருப்புக்கு அதுதான் காரணம்.