ரம்மியமான கதைகள்: நைபால் பற்றி டயனா அடில்

அடிக்கடி இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர் வெளிநடப்பு செய்வது வாடிக்கை. அன்று நல்லவிதமாக நடந்துகொண்டார். எதற்காகவும் மற்றவர்களுக்கு அவர் நன்றி சொல்லி நான் இதுவரை கண்டதில்லை. புலம்பியபடியே விருது விழாவுக்குச் சென்று தனது காசோலையைப் பெற்றுக்கொண்டார். அவர் நல்லவிதமாகவே நடந்துகொண்டதாகவே எனக்குப் பட்டது. அந்த காலகட்டத்தில் நான்  மிக சிரமத்துடனேயே அவர் மீதான என் அன்பை தக்க வைத்துக்கொண்டிருந்தேன். அதீத புத்தி கூர்மை மற்றும் நகைச்சுவை உணர்வு கொண்டவரான அச்சிறுவயதுக்காரரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் அலுவலகம் இருந்த சோஹோ பகுதியின் காபி கடையில் நடந்த எங்கள் முதல் சந்திப்பு எனக்கு நினைவிலிருக்கிறது. ரொம்ப சிறியவனாகத் தெரிந்தார். மிகவும் சங்கோஜியாக …

வி. எஸ். நைபால் என்ற மனிதரும் அவர் எழுத்தும்

நோபல் பரிசுச் செய்தி குறித்து அறிய வந்தபோது இங்கிலாந்தின் கிராமப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நைபால் பெருந்தன்மையான பதில் அளித்தார். இங்கிலாந்து (அவரது “தாயகம்”), இந்தியா (அவரது “மூதாதைகளின்” தேசம்), அவரது இலக்கிய ஏஜண்ட் என்று நன்றி கூறினார். அவர் தன்னை “தேர்வுக்குப் பொருத்தமான நபராக” கருதவில்லை என்று விளக்கினார் (1972ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அவர் நோபல் பரிசுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்), தன் பிறப்பிடத்தைக் குறிப்பிடுவதைத் தவிர்த்தார். ட்ரினிடாட்டில், புதிய தேசிய நூலகத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. நைபால் தன் பதின்ம பருவத்தின் சில ஆண்டுகளைக் கழித்த செயிண்ட் ஜேம்ஸ்ஸில் உள்ள இல்லம், “திரு பிஸ்வாஸின் நண்பர்கள்” என்ற அமைப்புக்கு அளிக்கப்பட்டது. அது நைபால்கள் மற்றும் பிற மேற்கிந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த ஆய்வு மையமாக …

நைபால் எங்கிருந்து வருகிறார்?

தெலுங்கு மொழியில் 1930களின் துவக்கங்களில் எழுதப்பட்ட ‘ஹாஹா ஹூஹூ’ என்ற அற்புதமான சிறுகதையில் விஸ்வநாத சத்யநாராயணா (1893-1976) ஒரு விபத்தாய் இங்கிலாந்து சென்ற பயணியை விவரிக்கிறார்: ஒரு கந்தர்வன், செவ்வியல் காலத்துக்குரிய இந்தியாவிலிருந்து வந்த பறக்கும் பாதி மனிதன் பாதி குதிரை, தன் சிறகுகளை இழந்து ட்ரஃபல்கர் சதுக்கத்தில் விழுகிறான். சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அவன் சிறகுகள் மீண்டும் முளைக்கக் காத்திருக்கையில் ஆங்கில சமூகத்தை எதிர்கொள்வது பல விஷயங்களைப் பற்றி வரண்ட நகைச்சுவையுடன் பேச சத்யநாராயணாவுக்கு வாய்ப்பளிக்கிறது: கலாசார வேறுபாடு, அறிவியல் வளர்ச்சியின் இயல்பு, காலனிய ஆட்சிக்கு உட்பட்டிருந்தாலும் இந்திய கலாசாரம் இழக்காதிருக்கும் வளங்கள், இவற்றில் சில. இது உயர்வுநவிற்சி தன்மை கொண்ட பிரதியல்ல, பண்டைய இந்து விழுமியங்களின் மறுமலர்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் தீவிர குரலுமல்ல. தெலுங்கு மற்றும் சம்ஸ்கிருத இலக்கிய மரபின் நீண்ட தொடர்ச்சியில் முழுமையாய் ஒன்றியிருந்தும்கூட தனித்தன்மை கொண்ட நவீன இலக்கிய நுண்ணுணர்வு அமையப் பெற்றிருந்த சத்யநாராயணா இன்று ஆந்திர பிரதேசத்துக்கு வெளியே அதிகம் வாசிக்கப்படுவதில்லை. அவரது கந்தர்வன் விண்ணில் உயரப் பறந்து கதைக்கு முடிவு கட்டுகிறான், குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் தன் ஆங்கிலப் பிணைப்பாளர்களை நோக்கி, ‘இதைவிட சிறுபிள்ளைத்தனமான இனத்தை’ கண்டதேயில்லை என்று கூவிச் செல்கிறான்

காயப்படுத்துவோரும் காயமுற்றோரும் – வி.எஸ். நைபாலின் சாம்ராஜ்யம்

இந்திய சமூகவியல் கோட்பாட்டாளரான அஷீஸ் நந்தி கிப்லிங்கிற்கு இரண்டு குரல்களிருப்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். ஸாக்சோஃபோன் குரல், ஓபோ குரல் என்று அவர் வகைப்படுத்தியதாக நினைவு. முதலாவதானது கடுமையான, இராணுவத் தொனி கொண்ட ஏகாதிபத்திய எழுத்தாளருடையது. இரண்டாவது, துணைகண்டத்தின் கலாச்சாரங்களை வியக்கும் இந்தியத்தனம் ஊடுருவும் கிப்லிங்கின் குரல். நைபாலிற்கும் ஒரு ஸாக்சோஃபோனும் ஒரு ஓபோவும் இருக்கிறது: ஒரு கடுங்குரலும், ஒரு மென்குரலும். இவற்றை நாம் காயப்படுத்துபவர் மற்றும் காயமுற்றவரின் குரல்கள் என்றும் அழைக்கலாம். காயப்படுத்துபவரின் குரல் நாம் நன்கறிந்ததே – பின்காலனித்துவ ஆய்வுகளையும் இலக்கியவுலகையும் வசீகரிக்கும் வெறுப்பின் மூலம்

படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்: வி.எஸ். நைபால்

தன்னை தொடர்ந்து மீண்டும் புதிதாய்ப் படைத்துக் கொள்ளும் தேவை தீக்கங்கு விரல்களாய் அவரைத் தீண்டுவது நிற்கவில்லை, அவரது சுடர்மிகு அறிவு, “தன் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்துவது,” அதுவொன்று மட்டுமே அவருள்ளத்தில் தன்னைச் சூழ்ந்திருந்த வேடிக்கை மனிதர்களிடமிருந்து அவரைப் பிரித்துக் காட்டியது. நம் இளைஞன் ஒரு துயர் தன் இதயத்தில் கவிவதை உணர்கிறான், ஆயினும் அலையொன்று அவனைச் சாடி நனைக்கிறது, ஏதோ ஒரு உன்னதம் தன்னைத் தொட்டாற்போல் இருக்கிறது. நைபாலின் பிஸ்வாஸ் போல், அவரும், மார்க்குஸ் அவுரேலியஸின் மெடிடேஷன்களை ஸ்லம்பர்கிங் மெத்தையில் படுத்திருந்தபடி வாசித்து ஓய்வெடுக்கலாம், என்று அவன் ஆறுதல் சொல்ல விரும்புகிறான், உறவினர் விஷயத்தில் அந்தப் புத்தகம் ஃபைன்மேனின் ‘லெக்சர்ஸ் ஆன் பிசிக்ஸ்’ ஆக இருக்கக்கூடும். ஆனால் இது அத்தனையிலும் தன்னிரக்கத்தின் நெடி சிறிதளவு வீசுவதையும் உணர்ந்து, “உள்ளபடியே உள்ளது இவ்வுலகம்,” என்ற மாபெரும் துவக்கத்துக்குப் பின் ‘பெண்ட் இன் தி ரிவர்’ நாவலில் வருவது, “ஒன்றுமில்லாதவர்கள், தாம் ஒன்றுமில்லாமல் ஆக அனுமதித்தவர்கள், அவர்களுக்கு அங்கு இடமில்லை,” என்ற சொற்கள் என்பதை நினைவுகூர்கிறான். அதையொட்டியே அவனும் தன் உறவினரிடம், “கனவு காண்பது போதாது, செயல் புரிய வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறான்