இன்று இந்தியாவில் தான் உலக அளவில் இளைஞர்கள் அதிகம். மூன்றில் ஒருவர் இளைஞர் என்கிறார்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் குழந்தைப்பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாக குறைவாக இருந்துவருகிறது. வளரும் அறிவியல் சூழலில், சராசரி வயது உலகெங்கும் ஏறிக்கொண்டே வருகிறது. நான் வாழும் சிங்கப்பூரில், சராசரியாக முதியவர்கள் தொண்ணூறு வயது “அன்று செயலழிந்தல மருபொழுது”
Tag: வித்யா அருண்
மனதை லேசாக்கிய மலேசியப்பயணம்
முதலில் முருகன் கோவில், அதற்குப்பக்கத்தில், விநாயகர், சிவன் அம்பாள் என்றிருக்கும் தனிக்கோவில், பெருமாளுக்கென தனி கோவில், நெஞ்சில் இராமனை சுமந்தபடியிருக்கும் ஆஞ்சநேயர் என்று இந்த கோவில் வளாகம் மெல்ல மெல்ல, பலகோவில்களில் கூட்டமாக மாறி இருக்கிறது.வாசலில் பல மலர்மாலைகள் விற்கும் கடைகளையும், லட்டு, ஜிலேபி, முறுக்கு என விற்கும் பணியாரக்கடைகளையும், இளநீரை சீவித்தரும் கடைகளுமாக அடிவாரம் எப்போதும் போல பரபரப்பாக இருந்தது.
பொன்டெங்
“என் மகன் இப்போது தொடக்க நிலை நான்கில் படிக்கிறான். அவனுக்குத் துணைப்பாட வகுப்பு, பள்ளியில் உள்ள மாணவர் பராமரிப்பு நிலையத்துக்கு வெளியே சில நூறு மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அவன் சரியாக வகுப்புக்குப்போகிறானா என்பதைக்கண்காணிக்க இது நிச்சயம் உதவும்”
அதிர்ச்சியாக இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல், தட்டிலிருந்து உணவை மென்றேன்.
பிராணஜீவிதம்
நாம் எப்படி மனம் போன போக்கில் இருக்கிறோமோ, அப்படியே இயற்கையும் நடக்க ஆரம்பித்துவிட்டது. பருவநிலை மாற்றங்களை எல்லா நாட்டினரும் அனுபவிக்கின்றனர். மழை மாதங்களில் மழை பெய்வதில்லை, பெய்தாலும் பெருவெள்ளமாக மாறி கடலில் சென்று சேர்கிறது.ஆல், அரசு, பனை, புன்னை போன்ற மரங்கள் நெடுங்காலம் வாழக்கூடியவை.மண் அறிப்பைத்தடுப்பவை. காற்றின் மாசைக்கட்டுக்குள் வைப்பவை. பருவ நிலை மாற்றத்தைக்கட்டுக்குள் வைக்க உதவுபவை
”காலாழ் களரில்” – புத்தக மதிப்புரை
சிறுகதைகள் அளவிற் சிறியவை, முக்கிய கதை மாந்தர்களாக ஒன்றிரண்டுபேர் இடம்பெற்றிருப்பார்கள். களமும் பொழுதும் குறுகிய பரப்பிற்குள் அடங்கியவை, உண்மையில் அவை மனித உயிர்வாழ்க்கையின் காட்சித் துணுக்குகள், அடிக்கோடிட்டு சொல்லப்படுபவை. ஒருதேர்ந்த சிறுகதையாளர், தன்வாழ்க்கையில் தான்சார்ந்த சமூக நிகழ்வை, தனது படைப்பென்கிற புகைப்படக் கருவியில் ‘கிளிக்’ செய்கிறார். கலைஞரின் கலைத்துவ ஞானம், புகைப்படக் கருவியின் செயல்திறனுடன் இணைந்து எது சிறந்ததோ, எது முக்கியத்துவம் வாய்ந்ததோ, எது பின்னாட்களில் நினைவூகூரப்பட்டு மனதிற்கு ஆறுதல், மகிழ்ச்சி, சுகம், தரவல்லதோ அதை தன் கருவியில் பதிவு செய்து வாழ்க்கையின் ஈரத்தை, வறட்சியை, தென்றலை, புயலை, வெறுமையை, அபரிதத்தை,சகமனிதரோடு பகிர்ந்துகொள்கிறார். ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரிடமும் இத்திறனைச் சந்திக்கிறோம்.
மூத்துத்தி மாமி
ரேழியின் வலதுபக்க அறை. அது தான் சமையல் அறையும், பூஜை அறையும். அதோடு ஒட்டிய மற்றொரு அறையில் படுக்கை, அலமாரி இத்யாதிகள். உத்திரத்திற்கு மேலே கொடுக்கப்பட்டிருந்த மர சட்டங்களுக்கு இடையே, வெளிச்சத்திற்காக வைக்கப்பட்டிருந்த கண்ணாடி சதுரத்தின் வழி, சூரிய ஒளி, பல துகள்களின் கலவையாய், நீண்ட வெளிர்மஞ்சள் நிறப்பின்னல் போல, தரைவரை நீண்டது. அந்த வெளிச்சத்தில், மின்னிய இருபுற மூக்குத்திகளோடு மதுரா மாமி, வெண்டைக்காயைத் தரையில் உட்கார்ந்து திருத்திக்கொண்டிருந்தாள். மண்ணெண்ணெய் அடுப்பில், உலை கொதித்தது. மத்தியான சாப்பாடு மாமாவிற்கு எப்போதும் ஆத்தில் தான்.
வாராதே இனி வார்தா
என்ன தான் வெளிநாட்டு வாழ்க்கை சுகமாக இருந்தாலும், பெற்றவர்களைத் தனியே தவிக்கவிட்டு போகும் இந்த வாழ்க்கை உயர்வில் முழு நிம்மதி என்றும் இல்லை.
வயதான முதியவர்கள், என்ன உடல் நிலை இருந்தாலும், காலம் கருதி எல்லாருடனும் முகமலர்ச்சியோடு பேசவேண்டியிருக்கிறது.
பிற மொழி இலக்கியம் மற்றும் ஈழ இலக்கியம்
தா.நா.குமாரசுவாமி வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அவர் மொழிபெயர்த்தபோது கூகிள் போன்ற இந்நாளைய வசதிகள் எதுவுமில்லை. எல்லா அத்தியாயத்திலும் பரிபாடல், திருக்குறள், தேவாரம், பெருங்கதை, திருக்கோவையார், சூளாமணி, கம்பராமாயணம், குறுந்தொகை, பெரியாதிருமொழி போன்றவற்றிலிருந்து ஓரிரு பொருத்தமான வரிகளைச் சேர்த்திருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பாளரின் வேலை, வெறும் மொழிமாற்றம் மட்டுமல்ல, பிறமொழி வாசகனுக்கும், ரசனை கெடாமல் அந்த படைப்பைக் கொண்டு சேர்ப்பது என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த புத்தகம்.
கோவிட்-19 கால மனநலமும் இனநலமும்
தீநுண்மித் தொற்று காலத்தைப் பொருத்தவரை, அதுவரை என்ன மன நலனில் மூத்தோர் இருந்தார்களோ, அதைக் காப்பாற்றிக்கொள்ளவே அரும்பாடுபட வேண்டியதாக இருக்கிறது.
கருவாய் உயிராய்
என்னைப் பயமுறுத்த வேண்டாம் என்று ஒரு சிற்றுந்தில் என் கணவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுவந்தார். நாங்கள் இறங்கும் நேரம் ஐந்து தாதிகள் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். என் தலையைத் தடவி அணைத்த அவர்கள் யாரும் தமிழ் பேசுபவர்கள் அல்லர். அரசு மருத்துமனை பற்றிய என் பிம்பம் முற்றிலும் உடைந்தது.
அ.வெண்ணிலாவின் நாவல்- கங்காபுரம்-குறித்து ஒரு வாசகப்பார்வை
முதல் பகுதியில், சரியான இடத்தில் இந்தப் புதினத்தை துவங்க, திருமதி. வெண்ணிலா அதிகம் உழைத்திருக்கிறார். மார்கழி திருவாதிரை நாள், தில்லை, திருவாரூர், கிள்ளை, தஞ்சை என்று பல இடங்களில் எப்படி இருக்கிறது என்பதை சொல்லி, அரசியல் ரீதியாக எப்படி இருந்திருக்கும் என்ற பார்வையை முன்வைக்கிறார்.