அஷ்டத்யாயீ

பாணினி ( Pānini ) கி மு 350ல் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் வசித்தவர் எனக் கூறப்படுகிறது. இந்திய மொழியியலின் தந்தை என்று மதிக்கப்படுபவர். அவர் எழுதியது, (சிற்சில முன் தொகுப்புக்களின் உதவி கொண்டும், தானே பெரும்பாலும் வடிவமைத்தும்) அஷ்டத்யாயீ என்னும் வடமொழி இலக்கண புத்தகம். எட்டு அத்தியாயங்கள் கொண்டுள்ள நூல். இங்கே அத்தியாயங்கள் என்று குறிப்படுவது புத்தகங்களை. ஒவ்வொரு புத்தகத்திலும் நான்கு பாடாந்தரங்கள். வடமொழி இலக்கணத்திற்கான 4000 நெறிமுறைகள் கொண்டுள்ளது. இதன் சிறப்பே இது வெறும் இலக்கண நூல் மட்டுமில்லை; படிப்படியான வழிமுறைகளின் படி, இதைக் கொண்டு இலக்கண சுத்தமான வார்த்தைகளையும், வாக்கியங்களையும் அமைக்க முடியும் என்பதால் இது முழு அளவிலான ஒரு மொழி இயந்திரம்.