’பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் வாழ்ந்த டானியல் சகோதரர்கள் தென்னிந்தியாவில் பயணம் செய்தார்கள். அப்போது தாம் கண்டு களித்த பட்டணக்காட்சிகளையும் கோட்டைக்காட்சிகளையும் ஓவியங்களாக வரைந்து எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குச்சென்றார்கள். அங்கே எல்லாபடங்களையும் செப்புத்தகடுகளுக்கு மாற்றி ஆக்வாடிண்ட்( நீர்வண்ண) பதிப்புகளாக நூல் வடிவில் வெளியிட்டார்கள். 144 ஓவியங்கள் ஆறு தொகுதிகளாக அவை வெளிவந்தன. கீழைநாட்டு இயற்கைக்காட்சிகள் ( ஓரியண்டல் சீனரி) என்னும் தலப்பில் அமைந்த அத்தொகுதிகளை தற்செயலாகப்பார்த்து மனம் பறிகொடுத்த விட்டல் ராவ் தனக்குள் உருவான மன எழுச்சியின் காரணமாக அத்தொகுதிகளில் உள்ள கோட்டைகளை நேரில் சென்று பார்த்து எழுதும் திட்டத்தை தனக்குள் வகுத்துக்கொண்டார்.’