மனிதரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்

This entry is part 6 of 6 in the series புவிச் சூடேற்றம்

கடலில் வாழும் உயிரினங்கள், இந்தச் சூடான கடலில் வாழப் பழக்கப்படுத்திக் கொள்கின்றன. இல்லையேல் மடிய வேண்டியது தான். சில சின்ன உயிரனங்கள், பெரியவற்றை விட, மிகவும் பாதிக்கப்படுகின்றன. துருவப் பகுதிகளில் வாழும் krill போன்ற சின்ன உயிரினங்கள், இந்தச் சூடேற்றத்தால், 80% வரை மறைந்து வருகின்றன. இந்தக் கடல் உணவுச் சங்கிலியின் ஆரம்பத்தை, மனிதன், வெற்றிகரமாக அதனருகே கூடப் போகாமல், அறுத்து விட்டான்

புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5

This entry is part 5 of 6 in the series புவிச் சூடேற்றம்

மனிதனின் மிகப் பெரிய தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜனத் தொகைக்கு உணவு உற்பத்தி செய்வது. நிலத்தில் உள்ள நீரில் 70% விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் உணவில் 25% முதல் 30% வரை, பயனில்லாமல் போகிறது. குறிப்பாக, சமைத்த உணவு, பயனில்லாமல் போவது சுற்றுச்சூழலுக்கு நல்லது அல்ல. அதிலிருந்து உருவாகும் மீதேன் போன்ற வாயுக்கள் மேலும், புவி சூடேற உந்துகின்றன