கொழும்பு டீ

மலர் இப்படித்தான், எந்த நேரம் என்று இல்லாமல் அலைபேசியில் அழைப்பது, இன்னும் சற்று நேரத்தில் திருப்ப அழைக்காவிட்டால் அவ்ளோ பிஸி ஆவா இருக்க என்று வீட்டுக்கே கிளம்பி வந்து கோவித்துக்கொள்வது, அவனது அணைத்து அலுப்புகளையும் என் காதுகளுக்கு மடை மாற்றி விடுவது, நான் கோவப்பட்டால் ” நீ தான் என் பஞ்சிங் பேக்” என்று என் மூக்கை செல்லமாக திருகுவது என்று என்னால் வெறுக்க முடியாத ஓரு சித்திரம்.

கீதப்ரியா, லதா, ஜோதி

அன்று உழவர் சந்தையிலிருந்து வெளியே வரும் போது, வாசலில் பூக்கார பாயிடம் மல்லிகை பூ எடை நிறுத்தும் போது தான் கவனித்தேன் வலது புற டீக்கடையில் நிற்பது ஜோதி மாதிரி இருக்கிறதே என்று. உழவர் சந்தைக்கு போனால் எப்படியும் ரெண்டு தெரிஞ்சவங்கள பார்த்துவிடுவேன். நின்னு நாலு பழமை பேசிவிட்டு “கீதப்ரியா, லதா, ஜோதி”

வேணி

வசுமதி தான் வேணியைப் பற்றி விதவிதமாக எங்களுக்கு தகவல் தருவாள். ரசம் சாப்பாட்டை நிறைய நேரம் பிசைவது வேணிக்கு பிடிக்காது, படுக்கை விரிப்பு ஓரத்தில் சுருங்கி இருந்தால் கூட சரி செய்து தான் படுப்பாள், இரவு தூங்கும் முன் பாதத்தை சோப்புப்போட்டு கழுவிட்டு தான் கட்டில் மேல் கால் வைப்பாள், அதிக சத்தம் கேட்டால் காதுகளை பொத்திக்கொள்வாள்  என்று நிறைய  சொல்லுவாள்.

வெயில்

அந்தி வெயில் பிடிக்காமல் போனதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் வெறுக்கும் ஒரு காரணம், அம்மச்சி இறந்த அன்று, அம்மச்சியை குளிப்பாட்டி, கையில் கடைசியாக வெற்றிலை பாக்கு கொடுத்து, எடுத்துக்கொண்டு சென்றபோது, மாலை வெயில் லேசாக கண்கூசும் படி அடித்ததே. மாலையில் பொழுது சாயும் போது அடிக்கும் அந்த கடைசி கண் கூசும் வெயிலை பார்த்தாலே அம்மச்சி பாடையுடன் சென்றது தெளிவாக படமாக ஓடும். அந்த வெயில் ஒரு தவிப்பையே இன்று வரை தருகிறது.

ரஜத்

அடுத்த நாள், கீதா கஃபே ஓரமாக உட்கார்ந்து பீடியைப் பற்ற வைத்த போது, ரஜத் கம்பளியை எண்ணி எண்ணி பார்ப்பதும், சுற்றும் முற்றும் பார்ப்பதுவுமாக விடுபட்ட கம்பளிக்கு என்ன என்னவோ கணக்கு போட்டு பார்ப்பதை பார்த்தேன். எனக்கு அன்னக்கி சோறே இறங்கவில்லை.
பேசாம குப்பை தொட்டிக்கு பக்கத்துலேயே கொண்டு வந்து போட்டுவிடலாமா என்றும் ஒரு யோசனை.

பவளமல்லி

கண்மணி சித்தி மகன் ரமேஷ் அண்ணா புதிதாக வாங்கிய பைக்கில் துளசி சித்தியை வைத்து எங்கள் வீட்டுக்கு ஓட்டி வந்தபோதுதானா வள்ளி அத்தை இங்கு இருக்க வேண்டும். “பரவால்ல இனி துளசி வண்டியிலேயே சுத்திக்கலாம்” என்றபோது வெளிப்பட்ட குரூரத்தின் சூடு தாங்காமல் துளசி சித்தி வாடிப்போனாள். இத்தனைக்கும் ரமேஷ் அண்ணாவுக்கும் துளசி சித்தி, சித்தி முறைதான்.

ஆபரேஷன் அணில்

” என்ன தேடுகிறீர்கள்” என்று அவர் கேட்க, இவர் “அணில் ஒன்று மேலே வர உதவ முயல்கிறோம்” என்றார். அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு சிறு உயிரை இவ்வளவு மதிக்கிறாரா மனுசன் என்று நினைத்தேன்.
“பரவாயில்லை, வாளி கொண்டு முயன்றிருக்கிறீர்கள், அணிலுக்கு வாளிக்குள் ஏற தெரியதல்லவா” என்று அந்த அமெரிக்கர் கயிற்றின் நீளம், வாளியின் உயரம், தண்ணீர் கிடந்த ஆழம் இவற்றை தனக்குள்ளே பேசியவாறே அனுமானம் செய்துகொண்டு அதி பயங்கர மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கும் தீவிரத்துடன் எங்கள் இருவரையும் பார்த்தார்.

ரங்கா

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, எங்கள் மில்லையும், பக்கத்து இடத்தையும் பிரிப்பதற்காக இடையில் இருந்தது மதில் சுவரல்ல. சில தென்னைமரங்கள்தான். அதிலும் அவை நடப்பட்டதே ஒரு மரம் எங்கள் பக்கம் சாய்வாகவும் இன்னோர் மரம் அவர்கள் பக்கம் சாய்வாகவும் நடப்பட்டிருக்கும். இதுவே அவரவர் மரம் என்பதற்கு அடையாளம்.

ஆணின் அன்பு

இது நடந்து 6 வருடங்கள் கழித்து கோயம்புத்தூர் செல்லும் பஸ்ஸில் அவரை பார்த்தேன். கண்டுகொண்டு பேசினார். “சரிங்க சார் கெளம்பறேன்” என்ற போது “இப்போ ஒடம்பு எல்லாம் பரவால்லயா” என்று கேட்டார். நான் ஒரு நிமிடம், நல்லாதான இருக்கேன் என்று நினைத்துக்கொண்டு விழித்தேன். “அங்க காலேஜ்ல இருக்கும் யோது வயத்துவலி இருந்துதே, இப்போ பரவால்லயான்னு கேட்டேன்” என்றார். நான் பதில் சொல்வதற்குள், “அன்னிக்கு எனக்கு வலிச்ச மாதிரி இருந்துச்சு போங்க” என்று அவர் சொன்ன போது அவரின் கண்ணாடி க்ளேரை தாண்டி அவர் கண் நிறைந்ததை கண்டேன்.

கம்பா நதி – ஒரு வாசக அனுபவம்

கடைசி வரை சங்கரன் பிள்ளை மீது கோபம் வரவில்லை, ஆற்றாமை தான் வருகிறது. அதில் கூட யாரையும் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ திரு வண்ணநிலவன் கூறுவதில்லை. கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்ற தோணியிலேயே நகர்த்திச் செல்கிறார். வாழ்க்கையை கருப்பு வெள்ளை தவிர்த்து இடையில் பார்க்கக் கற்றுத் தந்தது இந்நாவல்.