ராபர்ட் அற்புதராஜ்

அந்த நாள்! அப்போதுதான் பத்தாம் வகுப்பு ஆரம்பித்திருந்தது. அன்று பள்ளி முடிந்ததும் இரண்டு அணிகளாகப் பிரிந்து பயிற்சியாட்டம் ஆடினோம். ராபி எதிரணியில் ஆடினான். தாயைப் பிரியாத குழந்தைபோல பந்து அவன் காலைவிட்டு நகராமல் இருந்தது. எல்லைக்கோட்டில் நின்றிருந்த அலெக்சாண்டர் சார் ராபியின் ஆட்ட நுணுக்கங்களை சத்தமாகப் பாராட்டிக் கொண்டிருந்தார். தடுப்பாட்டக்காரனாக மாற்றப்பட்டிருந்த என்னைக் கடந்து ராபி ஒரு கோல் போட்டிருந்தான். சில நிமிடங்களில் ராபிக்கு மறுபடியும் கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது. காற்றில் பறந்துவந்த பந்தைப் பாதத்தில் தாங்கி நிறுத்தினான். வலப்பக்கம் நகர்ந்து இடப்பக்கம் ஓடி தடுக்க வந்த ஒருவனை ஏமாற்றினான்.

உன் பார்வையில்

பாட்டிலைக் காண்பித்து அவர்கள் போனதும் மீதமிருக்கும் இரு மடக்கு பியரை குடித்துவிட்டுப் போகலாம் என்று விக்னேஷ் உன்னிடம் கண் ஜாடையில் சொல்கிறான். நீ வேண்டாம் என்று தலையசைத்து பாட்டிலை வீசச் சொல்லி கண் காட்டுகிறாய். விக்னேஷ் மறுத்துத் தலையசைத்துச் சிரிக்கிறான். திடீரென ஒரு சைரன் ஒலி கேட்கிறது. சாலையில் ஒரு போலீஸ் ஜீப் தலையில் சுழலும் விளக்குகளோடு வந்து நிற்கிறது. உங்களுக்கும் ஜீப்புக்கும் நடுவே நிற்கும் பாஸ்கரும் ஜெயபாலும் சல்யூட் அடிக்கின்றனர். ஜீப்பின் முன்னிருக்கையிலிருந்து திரண்ட உடல்வாகுடன் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு காவல் அதிகாரி இறங்குகிறான்.

தனித்த வனம்  

கை அசைத்து வந்து நின்ற டாக்ஸியில் அமர்ந்து “கோவைப்புதூர், உறவுகள் எல்டர்ஸ் சொசைட்டி” என்றேன். ஆயிரம் ரூபாய் சார் என்றான். தலையை ஆட்டினேன். அப்பா இருந்திருந்தால் தீனமான குரலில் அவருக்கே உரிய கிண்டலுடன், “அதான் போயிட்டேனே, இனி எதுக்கு அவசரமா டாக்ஸி புடிச்சு வர்றே. உக்கடம் வந்தா நிறைய பஸ் காலியா கிடைக்கும். பழைய பஸ்ல ஏழு ரூபா டிக்கெட் எடுத்து பொறுமையா வா” என்று சொல்லி இருப்பார். 

பாஸ்னியக் காப்பி

‘யானைகளின் யுத்தத்தில் அழிவது எறும்புகளே’ என ஒரு சொலவடை உண்டு. அதேபோல அமேரிக்கா – சோவியத் ரஷியா வல்லரசுகளுக்கு இடையேயான பலப்பரீட்சை பெரும்பாலும் அவர்களால் தூண்டிவிடப்பட்ட சிறிய நாடுகளின் யுத்தங்கள் வாயிலாக வெளிப்பட்டது. இந்த ‘கோல்டு வார்’ அல்லது மறைமுக பனிப்போரில் சிக்காமல் இந்தியா, எகிப்து, யூகோஸ்லாவியா, கானா மற்றும் இந்தோனேஷியா ஆகிய வளரும் நாடுகள் தங்களுக்குள்ளே ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் கூட்டமைப்பே “கூட்டு சேரா இயக்கம்”.