டாக்டரும், முனைவரும்

திருமணம் முடிந்து கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு செல்ல தயாராகிக் கொண்டிருந்த சில நாட்களில்  அந்த கிராமத்து புகுந்த வீட்டில் புதுப்பெண்ணான என்னை  கும்பல் கும்பலாக வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு நாளில்  என் மாமியார்  அவர் வயதில் இருந்த இரு பெண்களுடன் வந்தார். அவர்கள் என்னருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் அவர்களில் ஒருவரைக்காட்டி என் மாமியார் என்னிடம் ’’இவளுக்கு ரெண்டு நாளா காய்ச்சலடிக்குது’’ என்றார்.நான் ஆதுரமாக அவர் கையை பற்றிக்கொண்டு ’’அப்படியா நல்ல ஓய்வில் இருந்து உடம்பை பார்த்துக்குங்க’’ என்றதும் என் மாமியாருக்கு வந்ததே கோபம், ’’ஆமா, இதை சொல்லத்தான் நீ இருக்கியா? ஒரு ஊசி போடு சரியா போகும்’’ என்றர். எனக்கு தூக்கிவாரி போட்டது.’’’ஊசியா என்னத்தை சொல்லறீங்க?”’ என்றேன்.

ஆபரேஷன் அணில்

” என்ன தேடுகிறீர்கள்” என்று அவர் கேட்க, இவர் “அணில் ஒன்று மேலே வர உதவ முயல்கிறோம்” என்றார். அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு சிறு உயிரை இவ்வளவு மதிக்கிறாரா மனுசன் என்று நினைத்தேன்.
“பரவாயில்லை, வாளி கொண்டு முயன்றிருக்கிறீர்கள், அணிலுக்கு வாளிக்குள் ஏற தெரியதல்லவா” என்று அந்த அமெரிக்கர் கயிற்றின் நீளம், வாளியின் உயரம், தண்ணீர் கிடந்த ஆழம் இவற்றை தனக்குள்ளே பேசியவாறே அனுமானம் செய்துகொண்டு அதி பயங்கர மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கும் தீவிரத்துடன் எங்கள் இருவரையும் பார்த்தார்.