ராதிகாப்பூர் சந்தையில், நிறைய மக்களின் கண் முன்னாலேயே, பாஞ்சு குண்டுவின் கடை கொள்ளையடிக்கப்பட்டது. இப்படி பட்டப்பகலில் இது போன்றதொரு சம்பவம் இதற்கு முன் இப்பகுதியில் நிகழ்ந்ததில்லை. கங்காசரணும் அப்போது அக்கடையில் பொருட்கள் வாங்கச் சென்றிருந்தான். கூரை வேயப்பட்ட அந்தக் கடை பெரியது. ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் நின்றிருந்தது. மக்கள் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்த சம்பவம் நிகழ்ந்தது. கடையைச் சுற்றி கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை என்னவென்று புரியாமல் திகைப்போடு கங்காசரண் பார்த்தான். மக்கள் ஓலமிட்டுக்கொண்டு கடைக்கு உள்ளேயும் வெளியேயும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பலர் திருட்டுப் பொருட்கள் நிறைந்த மூட்டைகளையும், கூடைகளையும் எடுத்துக்கொண்டு வயல்வெளிகளைத் தாண்டி ஆற்றங்கரையோரமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.
Tag: வங்க இலக்கியம்
மின்னல் சங்கேதம் – முழு நீள நாவல்
அந்த விஷயத்தைச் சொன்னவன் ஒன்றும் விஷயம் தெரியாதவன் இல்லை. அவனுக்கு அரிசி வியாபரத்தில் ஏற்கனவே அனுபவம் உண்டு. அவன் உறுதியாகச் சொன்னான், “உங்களுக்கு இந்த விஷயம் புரிய மாட்டேங்குது. நான் சொல்றேன் கேளுங்க, அரிசி விலை எக்கச்சக்கமாகப் போகுது. எனக்கு இந்த விஷயமெல்லாம் அத்துபடி. இந்த வியாபாரத்துல நான் ரொம்ப நாள் இருந்திருக்கேன்.”