அகார் அகார்

அகார் கடற்பாசிகள் கடலின் 20 லிருந்து 25 மீட்டர் ஆழங்களில் , 2 லிருந்து 40 செ மீ உயரம் வரை வளரக்கூடியவை. மையத் தண்டின் இருபுறமும் ஒழுங்கற்றுக் கிளைத்த சிவந்த நிற உடலம்(Thallus) கொண்டவை. அகார் ஜப்பானில் Gelidium pacificum என்னும் கடற்பாசியிலிருந்தும் பிற நாடுகளில் Gelidium sesquipedale, வகையிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றது.  ஜெலிடியம் வகை கடற்பாசிகள் இல்லாத ஐரோப்பிய நாடுகள் பிற கடற்பாசிகளிலிருந்து அகாரை தயாரிக்கின்றனர்.

லண்டானா கமாரா

லண்டானா வெர்பினேசி குடும்பத்தை சேர்ந்தது. இந்த பேரினத்தில் கமாரா உள்ளிட்ட சுமார் 150 சிற்றினங்கள் உள்ளன. லண்டானா ஒரு பல்லாண்டு தாவரம் இவை 7 அடி உயுரம் வரை வளரும் புதர் வகைகளாகவும் மரங்களில் படர்ந்து ஏறி வளரும் உறுதியான தண்டுகளையும் கொண்ட கொடி வகை தாவரமாகவும் சிறு செடிகளாகவும் காணப்படுகிறது.லண்டானாவின் அகன்ற முட்டை வடிவ எதிரிலைகள் கடும் நெடி கொண்டவை. இவை பல நிறம் கொண்ட மலர்கள் அடங்கிய மஞ்சரிகளை கொண்டிருக்கும். ஒரு செடியிலிருந்து சுமார் 12000 கருப்பு நிற சிறு கனிகள் உருவாகும்.

ஊனுண்ணித் தாவரம் – வீனஸ்

சுமார் 70 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மாபெரும் டைனோசர்கள் காடுகளில் பல்கி பெருகிக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட சில தாவரங்களுக்கு இலைகளில் நடைபெற்ற ஒளிச்சேர்க்கையில் கிடைக்கும் உணவு போதாமலும், அவை வாழ்ந்த நிலத்தில் சத்துக்கள் குறைவாகவும் இருந்ததால் அவற்றின் இலைகள் பூச்சிகளை பிடிக்கும் பொறிகளாக மெல்ல மெல்ல மாறி பரிணாம வளர்ச்சி அடைந்தது.  அவற்றின் வளர்ச்சிக்கு  நிலத்திலிருந்து கிடைப்பதில் போதாமல் இருக்கும் சத்துக்களை இவ்வாறு பூச்சிகளை, சிறு விலங்குகளை உண்பதன் மூலம்  அவை சரி செய்து கொண்டன.

கடுகு

இந்தியாவின் இரண்டாவது முக்கிய எண்ணெய் பயிர் கடுகுதான் (நிலக்கடலைக்கு அடுத்ததாக). பெரும்பாலான இந்திய கடுகுப் பயிர்கள் வடஇந்தியாவில் பயிராகின்றன. கடுகின் நுண் விதைகளில் 45 சதவீதம் கடுகு எண்ணெய் அடங்கியிருக்கிறது.  இந்தியாவின் மொத்த கடுகு உற்பத்தியில் 60 சதவீதம் உத்தரபிரதேசத்தில் பயிராகின்றது. இந்தியாவில் மிக அதிகமாக பயிராகும் கடுகு வகைகள்:

ரிஸின்

மார்கோவின் படுகொலையை இப்போது நினைக்கையில் , அக்கால அரசியல் காழ்ப்புக்கள் அப்படி நஞ்சூட்டப்பட்டு நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றும் , ஆனால் அப்போதும் இப்போதும் அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடில்லை என்பது 2020ல் ருஷ்ய எதிர்கட்சி தலைவரும், ஊழலுக்கெதிரான செயற்பாட்டாளருமான அலெக்ஸி நவல்னி (Alexei Navalny)க்கு நடந்த நஞ்சூட்டி கொல்லும் முயற்சியை அறிந்து கொண்டால் தெரியவரும். ரிஸின் கொண்டிருக்கும் ஆமணக்கு எண்ணெய் , உணவுப்பொருட்களில் சிறு அளவில் இவ்விதைகள் சேர்க்கப்படுவது ஆகியவை மிகுந்த கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும்

மிஸல்டோ – முத்தச் சிறுகிளை

பொதுவெளியில் பாராட்டுவது, அன்பை தெரிவிப்பது ஆகியவற்றிற்கு அவ்வளவாக பழக்கப்பட்டிருக்காத தென்னிந்திய சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு நிச்சயம் இது வெட்கத்தை உண்டாக்கும்  நிகழ்வுதான்.அந்த குறுங்கிளை மிஸல்டோ (Mistletoe) என்னும் ஒரு மர ஒட்டுண்ணிச்செடியின் பகுதி. இந்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இச்செடியின் கிளைகள் அலங்காரத்துக்கான பயன்பாட்டில் இருக்கின்றன எனினும் அதனடியில் முத்தமிட்டுக் கொள்ளும் வழக்கம் இந்தியாவில் இல்லை.

பைனும் இல்லாத ஆப்பிளும் இல்லாத பைன் ஆப்பிள்

அவை எவ்வாறு பழங்குடியினரால் கண்டு கொள்ளப்பட்டு சாகுபடி செய்யப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனினும் அவை பழங்குடியினரால் ஏராளமாக சாகுபடி செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்தன. பெரு மற்றும் மெக்ஸிகோவின் அகழ்வாய்வுகளில்  200 கிமு – கிபி 700  காலகட்டத்தில் அன்னாசி பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. மாயன்களும் அஸ்டெக்குகளும் அன்னாசியை சாகுபடி  செய்து அதன் மதுவை அருந்தியிருக்கின்றனர். பிரேசிலின் தென்பகுதியை சேர்ந்த அன்னாசி  15 ம் நூற்றாண்டில் மத்திய மற்றும் வடஅமெரிக்காவிலும் புழக்கத்திலிருந்து. 

டாக்டரும், முனைவரும்

திருமணம் முடிந்து கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு செல்ல தயாராகிக் கொண்டிருந்த சில நாட்களில்  அந்த கிராமத்து புகுந்த வீட்டில் புதுப்பெண்ணான என்னை  கும்பல் கும்பலாக வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு நாளில்  என் மாமியார்  அவர் வயதில் இருந்த இரு பெண்களுடன் வந்தார். அவர்கள் என்னருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் அவர்களில் ஒருவரைக்காட்டி என் மாமியார் என்னிடம் ’’இவளுக்கு ரெண்டு நாளா காய்ச்சலடிக்குது’’ என்றார்.நான் ஆதுரமாக அவர் கையை பற்றிக்கொண்டு ’’அப்படியா நல்ல ஓய்வில் இருந்து உடம்பை பார்த்துக்குங்க’’ என்றதும் என் மாமியாருக்கு வந்ததே கோபம், ’’ஆமா, இதை சொல்லத்தான் நீ இருக்கியா? ஒரு ஊசி போடு சரியா போகும்’’ என்றர். எனக்கு தூக்கிவாரி போட்டது.’’’ஊசியா என்னத்தை சொல்லறீங்க?”’ என்றேன்.

மைதா

கேடுவிளைவிக்கும் உணவுகள் என்று இணையத்தில் தேடினால் வரும் 10 உணவுகளில் பெரும்பாலும் முதலிரண்டு இடங்களில், மைதா, பரோட்டா இரண்டும் இருக்கும்
ஆனால் மைதா உடலுக்கு கேடுதருவது என்பதற்கு அடிப்படையாக எந்த அறிவியல் ஆதாரங்களும் காட்டப்பட்டதில்லை. இது குறித்த முறையான ஆய்வுகளும் செய்யப்பட்டதில்லை.

பாப்பாத்தி என்னும் பரமேஸ்வரி

வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் மூத்த மகனாக இருந்த அந்த ஆணின் உள்ளுறைந்திருந்த விலங்கொன்று அப்போதிலிருந்து விழித்துக்கொண்டது. அம்மா ஒருபோதும் அந்த இணை வைத்தலை மனத்திலும் கனவிலும் நினைத்து விடக்கூடாது என்பதை இத்தனை வருட தாம்பத்ய வாழ்வில் அப்பா என்கிற பெரும் வன்முறையாளர் கணம் கணமாக நினைத்துக் கொண்டே தான் இருந்தார். தன் எல்லாச்செயல்களிலும் அதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அம்மாவை வதைத்துக்கொண்டே இருந்தார்.

சந்தனம்

சந்தன மரம் அடர்த்தி மிகுந்தவை நீடித்த நறுமணம் கொண்டவை என்பதால்  செதுக்கு வேலைகளுக்கும், சிற்பங்களை உருவாக்கவும் பயன்படுகிறது. காய்ச்சி  வடிகட்டுதல் மூலம் முதிர்ந்த சந்தன மரங்களிலிருந்து சந்தன எண்ணெய்   எடுக்கப்பட்டு நறுமண திரவியங்கள், சோப்புக்கள், மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, வழிபாட்டு பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்காக பல்லாண்டுகளாகப்  பயன்படுகிறது

புல்லரிசிப் பூஞ்சை

1692ன் ஒரு துரதிர்ஷ்டவசமான நாளில் இளம் சிறுமிகளான பெட்டியும் அபிகெய்லும் வலிப்பு, உடல் நடுக்கம், தனக்குத்தானே பேசிக்கொள்வது, திடீரென உச்ச ஸ்தாயியில் அலறுவது என பல அசாதாரணமான இயல்புகளுடன் பித்துப் பிடித்தவர்களைப்போல் நடந்துகொண்ட போது ஊர்மக்கள் அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்து  விட்டதாக நம்பினர். கிராமத்து மருத்துவர் வில்லியமும் அதையே உறுதி செய்தார்

ஸாகே!

ஜப்பானிய தொன்மங்களிலும் ஸாகே இடம்பெற்றிருக்கிறது. ஒரு கிராமத்தில் யமட்டா நோ ஒரோச்சி (Yamata-no-Orochi) என்னும் எட்டுத்தலைகள் கொண்ட நாகமொன்று  ஒவ்வொரு வருடமும்  ஒரு இளம்பெண்ணை  விழுங்க வரும், எட்டாவது வருடம்  அப்படி விழுங்க வருகையில் கிராமத்தினரின் அழுகையை அந்த வழியே வரும் கடலின் கடவுளான  சுசானோ கேட்கிறார். அவர்களுக்கு உதவ முன்வரும் அவர்  அந்த மாநாகத்துக்கு எட்டு மாபெரும் பீப்பாய்களில்  கடும் ஸாகே  மதுவை  நிரப்பி வைக்கிறார். ஸாகே மீது விருப்பம்  கொண்டிருந்த  மாநாகம் எட்டுத்தலைகளையும் பீப்பாய்களுக்குள்   நுழைத்து ஸாகேவை அருந்தி மயங்குகையில் கடவுள் அதன் தலைகளை வெட்டிக்கொல்கிறார் ஜப்பானிய குழந்தைகள் மிக இளமையிலேயே கேட்டு மகிழும் கதைகளில் இதுவும் ஒன்று

காய்ச்சல் மரம் (சிங்கோனா)

ஒவ்வொரு கோடையிலும் மினுங்கும் பச்சை இலைக்குவையுடன் தெரியும் ஒவ்வொரு மரத்தையும் தேடித்தேடி பார்ப்பான். மாமனி ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் பனி மூடிய மலை முகடுகளில் ஏறி அழகிய இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த மலர் கொத்துக்கள் தெரிகிறதா என்று தேடுவான். 28 மரவகைகள் கண்டறிந்தும் அவன் தேடிய ஒன்று கிடைக்கவில்லை இன்னும்.மமானிக்கு அந்த வருடத்தின் வசந்தம் அதிர்ஷ்டத்தை கொண்டு வருமென்று நம்பிக்கை இருந்தது. தேடியதை கொடுத்தால் இன்னும் சில அல்பகாக்களை எஜமான் அவனுக்கு கொடுப்பாரென்பதால் மட்டும் அல்ல, அந்த மரத்தை காண்கையில் அவருக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்காகத்தான் அதைத் தேடுகிறான்.

யூகலிப்டஸ்

இந்த நவீன தேவதைக் கதையின் பெயர் ’’யூகலிப்டஸ்’’. 1 ஏராளமான உயரிய இலக்கிய விருதுகளை பெற்ற இந்த நாவலை  ஆஸ்திரேலியரான முர்ரே பெயில் (Murray Bail) எழுதினார்.ஆஸ்திரேலிய நிலப்பரப்பின் செழுமையான விவரிப்பு, பெண்மையின் அழகு, ஆஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்றான யூகலிப்டஸின் சிற்றினப் பெயர்களில் அமைந்திருக்கும் அத்தியாயங்கள், அபாரமான மொழிவளம் ஆகியவை கொண்ட  ’யூகலிப்டஸ்’  மிக அழகிய   காதல் கதை; இளமைப்பெருக்கில் இரு ஆணும் பெண்ணும் கொள்ளும் காதலும், ஆஸ்திரேலியர்களுக்கு  இயற்கையாகவே இருக்கும் யூகலிப்டஸ் மீதான காதலும் இணைந்த வசீகரமான கதைக்கரு கொண்டது யூகலிப்டஸ்.

இகபானா மலர்களின் வழி

உலகெங்கிலும் இன்று மத எல்லைகளை கடந்த மலர்களின் பயன்பாடு இருக்கிறது. தெய்வங்களின் மலர் இருக்கைகள், கோவில்களின் கல்தூண்களின்  மலர்ச்செதுக்குகள், தென்னிந்திய கோலங்களின் மலர் வடிவங்கள், மலர்க்களங்கள்,  குகை ஓவியங்களின் மலர் வடிவங்கள் என பண்டைய நாகரிகங்களின் மலர்களின் பயன்பாட்டினை குறித்த பற்பல சான்றுகள் உள்ளன. எகிப்திய கல்லறைகளில் பெரும்பாலானவற்றில் மலர்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக உருவாக்கப்பட்ட பிரபல அஜந்தா குகை ஓவியங்களில் கைகளில் ஒற்றை மலரொன்றை ஏந்தியிருக்கும் இடை ஒசிந்த ஓவியம் உலக பிரசித்தி பெற்றது.

காஃபி

அந்த காஃபி பயிர்களே இந்தியாவில் முதல் முதலாக பயிரிடப்பட்டவை. பாபா புதான்  கொண்டு வந்தது காஃபியின் இரு முக்கியமான சிற்றினங்களில் ஒன்றான அரேபிகா வகை. அவற்றிலிருந்து கிடைத்த பழங்களின் கொட்டைகளை பாபா மெக்காவில் தான் கேட்டறிந்த முறைப்படி  பக்குவப்படுத்தி வறுத்து அரைத்து பானமாக்கி உள்ளூர் மக்களுக்கு கொடுத்தார். காஃபி பானமும், பயிரும் அதன்பிறகு கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது

ஆரோக்கிய பச்சை

கூம்பு வடிவத்தை கொண்டிருக்கும் இம்மலையின் பாறைகளில் தொற்றி ஏற வேண்டி இருந்ததால் புஷ்பாங்கதனும் பிறரும் மலையேற்றத்தின் நடுவில் களைப்பும் சோர்வுமடைந்தனர். மர நிழல்களிலும் பாறை மறைவுகளிலும் பலமுறை அமர்ந்து நீரருந்தி ஒய்வெடுத்துக் கொண்டனர். ஆனால் உடன் வந்த காணிகள் ஒருமுறைகூட சோர்வடையாதது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது .பழங்குடியினர் அவ்வப்போது மடியில் கட்டிக்கொண்டிருந்த கருமையான சிறிய பழங்களை  எடுத்து உண்பதை அவர்கள் கண்டார்கள்

ஃபெனி – முந்திரிக்கனிச்சாறு

போர்த்துகீசியர்களால் 16 ம் நூற்றண்டில் முந்திரி இந்தியாவிற்கு அறிமுகமானதாகப் பொதுவாக சொல்லப்பட்டாலும் அதற்கு ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் குறிப்பாக தமிழக்தில் முந்திரி இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன.மேலும் திருச்சிராப்பள்ளியின் 2500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட  கோவிலின் கல் தூண்களில் முந்திரிபழங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

வெட்டிவேர்

வெட்டிவேர் ஆசியாவை தாயகமாக கொண்டது. வெட்டிவேரின் வட இந்திய, தென்னிந்திய என்னும் இரு வகைகளில் வட இந்திய வகைகள் வழக்கம் போல் மலர்ந்து கொண்டிருக்கின்றன. 
கோடைகாலத்தில்  தென்னிந்தியாவெங்கும் உலை போல் கொதிக்கும் காலநிலையில் இருந்து மக்களை காப்பாற்றி குளிர்விக்க வெட்டிவேர் மற்றும் நனனாரி சர்பத்துகளும், தர்பூசணியும், இளநீரும் எப்போதும் கிடைக்கும். வீடுகளில்  பானை தண்ணீரில் நன்னாரி அல்லது வெட்டிவேர் போட்டு வைத்து நல்ல வாசனையும் குளிர்ச்சியுமாக நஅருந்தப்படும்.. வெட்டிவேர் தட்டிகளில் நீர் தெளித்த இயற்கை குளிரூட்டிகளும் பரவலாக புழக்கத்தில் இருக்கின்றன.  

பெருங்காயம்

 சைவம் அசைவம் என்னும் பாகுபாடில்லாது அனைத்துவித உணவுகளிலும் இந்தியாவில் சேர்க்கப்படும், உணவுக்கு வெங்காயம் மற்றும் பூண்டின் எரிமணத்தை அளிக்கும் இந்த பெருங்காயம் இந்தியாவில் விளைவதில்லை என்பது பலருக்கு வியப்பளிக்கும் செய்தியாக இருக்கும்.  உலகப் பெருங்காய உற்பத்தியில் 40 சதவீதம் இந்தியாவில் மட்டும் உபயோகிக்கப்பட்டாலும் இந்தியா அஃப்கானிஸ்தான் மற்றும் இரானிலிருந்தே இத்தனை வருடங்களாக பெருங்காயத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.

மலர்ப் பித்து

வருடாவருடம் ட்யூலிப் மலர்க்கண்காட்சிகளும்  தொடர்ந்து நடந்தன. கண்காட்சிகளின்போது மிக அழகிய ட்யூலிப் வகைகளுக்கு பரிசுகளும் அளிக்கப்பட்டன.  1849ல் யார்க்கில் (York) நடந்த ஒரு மலர்க்கண்காட்சியில் போட்டியில் 2000 வகை ட்யூலிப்கள் இருந்ததால் நடுவர்கள் சுமார் 6 மணி நேரம் செலவழித்து பரிசுக்குரிவற்றை தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது.

வலி

ஹுவா டுவோவுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய பரிச்சயம் இருந்தது, பௌத்தத் துறவிகளோடு பழகி அந்த மருத்துவ முறையை அவர் கற்றுக் கொண்டிருந்தார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவருடைய மருத்துவ முறைகள் சமகாலச் சீன மருத்துவத்தை விட ஒரு நூறாண்டு முன்னே சென்றிருந்தவையாக இருந்தன என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சீனாவில் அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்துகளைப் பயன்படுத்திய முதல் மருத்துவர் என்று இவர் கருதப்படுகிறார்.

சிக்கரி

காபி அருந்துதல் செல்வாக்கின் அடையாளமாகவும் ஆனது. காஃபியின் மீதான விருப்பம் கூடி காஃபி பயன்பாடு மேலும் மேலும் அதிகரித்தபோது, காஃபி சாகுபடி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பல நாடுகளின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கியது. பொருளாதார ஸ்திரத்தன்மையின் பொருட்டு காஃபியின் பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பதற்காக, காஃபி இறக்குமதிக்கு இடைக்காலத் தடைகளும் புதிய வரிகளும் பல நாடுகளில் விதிக்கப்பட்டன. இதில் கீழ்தட்டு மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

சோயாவும் டோஃபுவும்!

சோயா பால், சுத்தமாக்கப்பட்டு ஊறவைத்த சோயா விதைகளை அரைத்த விழுதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. விழுது சூடாக்கப்பட்டு சோயாவின் கடும் நெடிக்கு காரணமான lipoxidase என்ஸைம்கள் நீக்கப்படும். பின்னர் வடிகட்டுதல் மூலம் கசடுகள் நீக்கப்பட்ட சோயா விழுதில் சர்க்கரை மற்றும் நீர் கலக்கப்பட்டு, அதன் நறுமணமும் நுண் சத்துக்களின் அளவும் மேம்படுத்தப்படும். பின்னர் இவை கிருமி நீக்கம் செய்யப்பட்டு, கொழுப்புக் கட்டிகளை அரைத்து, கலக்கி, மிருதுவாக்கப்பட்ட பால் சந்தை படுத்தப்படுகின்றது…. விலங்குப்பாலுடன் ஒப்பிடுகையில் சோயாபாலில் புரதம் கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் அதே அளவில் இருந்தாலும் பிற முக்கியமான நுண் சத்துக்கள் மிக குறைவாக இருப்பதால் அவை தயாரிப்பின் போது சேர்க்கப்படுகின்றன.

புகையும் , புகை சார்ந்தவைகளும்

கடந்த  வார உலக செய்திகளில் மிக முக்கியமாக கவனிக்கப்பட்டது நியூசிலாந்தின் அதிரடி அறிவிப்பொன்று.2008’ம் ஆண்டிற்கு பிறகு பிறந்தவர்கள்  சிகரெட் மற்றும் புகை பிடிப்பதற்கான எந்த ஒரு தயாரிப்பையும் வாங்க வாழ்நாள் தடை விதித்திருக்கிறது நியூசிலாந்து. புகையிலை தொழில் வரலாற்றிலேயே இப்படியொரு அதிரடி முடிவு எந்த காலகட்டத்திலும், எந்த ஒரு நாட்டிலும் எடுக்கப்பட்டதில்லை. 

லினன்

ஆளி எல்லாவித நிலங்களிலும், வளரும் இவற்றிற்கு மிகக்குறைந்த அளவே உரங்களும் நீரும் தேவைப்படும்..பயிரிடபட்ட நிலத்தில் சத்துக்கள் எல்லாம் ஆளி உறிஞ்சிவிடுவதால் பின்னர் பல்லாண்டுகளுக்கு நிலம் தரிசாகவே விடப்படும்..ஒரு நிலப்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் ஆளி சாகுபடி செய்யப்படுவதில்லை. குறைந்த பட்சம் 7 வருட இடைவெளியில் ஆளி பயிரிடுகையில் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கிறது….பயிர் முற்றுவதற்கு முன்னரே அறுவடை செய்கையில் இளம் தண்டுகளின் நார்கள் மிக மிருதுவாக இருப்பதை அறிந்துகொண்டு, விதைகள் உருவாகும் முன்பே அறுவடை செய்யும் முறையை இன்று வரை கையாளும் அயர்லாந்தில் ஆளி விதைகள் இறக்குமதிதான் செய்யப்படுகின்றன.

நூடுல்ஸ் நூடுல்ஸ்!

லக்னோவில் ’மோனோசோடியம் குளுட்டமேட் சேர்க்கப்பட்டு இருக்கவில்லை’ என்று அறிவிக்கும் உறையுடன் இருந்த மேகி நூடுல்ஸின் ஆய்வக சோதனைகள் மோனோ சோடியம் குளுடமேட்டை கண்டறிந்தபோது முதல் அதிர்ச்சியும், ஆயிரம் மடங்கு அதிகமாக காரீயம் இருக்கிறது என்றபோது அடுத்த அதிர்ச்சியும் நாடு முழுவதும் உண்டானது.
நெஸ்லே அப்போது பிரச்சனையின் தீவிரத்தை முழுதாக அறிந்து கொண்டிருக்கவில்லை. விற்கப்பட்ட மேகி பாக்கெட்டுகளை  திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் தீர்ப்பை நெஸ்லே அலட்சியமாக எடுத்துக் கொண்டு, மக்கள் அச்சமடைய தேவையில்லை என்று மட்டும் சொல்லிவிட்டு  3 வாரங்கள் அமைதியாக இருந்தது.

நீலி

வேட்டைக்காரன் புதூர் கிராமத்தில் தாத்தா வீட்டில் இருக்கையில், அதாவது சுமார் 40 வருடங்களுக்கு முன்னர்,  ஒவ்வொரு வாரமும் வீட்டின் மண் தரையை பாட்டி  பசுஞ்சாணமிட்டு மெழுகுவார். முந்தின நாளே பறித்து வந்து, நீரில் ஊறிக் கொண்டிருக்கும்  நீலி அல்லது அவுரி எனப்படும் சிறுசெடியை அம்மியில் மைபோல அரைத்து, மெல்லிய “நீலி”

குன்றிமணி – கொல்லும் அழகு

வங்காளத்திற்கான அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேஜர் ராம்ஸே 1881 இல் வெளியிட்ட, அவரது பணிக்கால விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ’’குற்ற விசாரணை தடயங்கள்’’ என்னும் நூலில், அவர் நடத்திய ஒரு விசாரணையில், கால்நடைகளைக் கொன்றதற்கும், ஆறு கொலை வழக்குகளுக்கும் தொடர்புடைய ஒரு கைதி தெரிவித்த சுதாரியைத் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றிய விவரங்களை விளக்கமாக எழுதியிருக்கிறார்.

இரண்டாம் ஆதாம் – லின்னேயஸ்

தாவரங்களின் இருபெயரீட்டு  விதிகள், விமர்சனங்கள் மற்றும் புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பல தாவரங்களின் பட்டியலுடன் லின்னேயஸின்[i] ””கிரிடிகா பொடானிகா”(Critica Botanica)  நூல் ஜூலை 1737 ல் வெளியான போது, லின்னேயஸின் ஆய்வுகளை, கடுமையாக,  வெளிப்படையாக விமர்சிப்பவரான  யோஹான் சீகஸ்பெக் (johann siegesbeck)    மனமகிழ்ந்து போனார். சிலமாதங்களுக்கு “இரண்டாம் ஆதாம் – லின்னேயஸ்”

சீமைக்கருவேலம் – நன்றும் தீதும்

ரோமானிய தொன்மத்தில்  வளமை மற்றும் விடுதலையின் கடவுளான சனியின் (Saturn) மனைவி ஓபிஸ் (Opis)  நிலம்,மிகுதியான வளம் மற்றும் அறுவடையின் கடவுளாக கருதப்படுகிறார். ஓபிஸின் கைகளில் செங்கோலும், சோளக்கதிர்களும், தானியங்கள் நிரம்பி வழியும் கொம்புக்கொள்கலனும் இருக்கும். 1877ல் ஜமைக்கா’விலிருந்து இந்தியாவுக்கு தருவிக்கப்பட்டதால் ’’சீமைக்கருவேலம்’’  (foreign acacia) என்றழைக்கப்படும், தென் “சீமைக்கருவேலம் – நன்றும் தீதும்”

கிண்ணத்தை ஏந்துதல்

பல வடிவங்களில் இருக்கும் வைன் கோப்பைகளின் வசீகர வடிவம் அந்த பானத்தை ரசித்து ருசிப்பதற்கான் காரணங்களில் முக்கியமானதாகி விட்டிருக்கிறது…கோப்பைகளின் விளிம்பு எத்தனை மெல்லியதாக உள்ளதோ அத்தனைக்கு வைனை  ஆழ்ந்து ருசித்து அருந்தலாம்., விளிம்புகள் கூர்மையாக இல்லாமல் மென்மையாக்க பட்டிருப்பது வைனை நாவில் எந்த இடையூறுமின்றி சுவைக்க உதவுகின்றது. கிண்ணப்பகுதியை கைகளால் பற்றிக்கொள்கையில் உடலின் வெப்பத்தில் வைனின் சுவை மாறுபடலாம் என்பதால் கோப்பைகளை எப்போதும் தண்டுப்பகுதியை பிடித்தே கையாள வேண்டும்.

நஞ்சை வாயிலே கொணர்ந்து!

அந்த சிறையறையில் கூடியிருந்தவர்கள் அனைவரும் மெளனமாகவும் துக்கத்தை கட்டுப்படுத்தியபடியும் இருந்தனர். அப்போதுதான் குளித்து விட்டு புத்துணர்வுடன் வந்த, இன்னும் சற்று நேரத்தில் விஷமருந்தி இறக்கப்போகும் அந்த மரணதண்டனைக் கைதி மட்டும் முகமலர்ச்சியுடன்  இருந்தார். சிறைக்காவலரின் ஆணை கிடைத்ததும். அன்றைய கொலைத்தண்டனையின் உதவியாளனாக இருந்த அடிமை சிறுவன் உள்ளே சென்று  “நஞ்சை வாயிலே கொணர்ந்து!”

வெனிலா கல்யாணம்

அந்த மாபெரும் பண்ணையைச் சுற்றி வருகையில், 20 வருடங்களுக்கும் மேலாக வளர்ந்துவரும் ஒரு கொடியில் இரு பச்சை நிறக் காய்களைக் கண்டு அப்படியே மலைத்து நின்றவர் ’’இவை எப்போது காய்த்தன’’ என்று எட்மண்டிடம் கேட்டார். ’’நான் சில நாட்களுக்கு முன்பு கைகளால் இதன் மலர்களுக்கு மணம் செய்துவைத்தேன், எனவேதான் காய்கள் வரத் தொடங்கி இருக்கின்றன’’ என்ற எட்மண்டை அவர் அப்போது நம்பவில்லை.

எருக்கு

திருமண தோஷம் உள்ளவர்கள் முதலில் வாழைக்குத் தாலி கட்டுவதை போலவே பல சமூகங்களில் எருக்குக்கு தாலி கட்டுவதும் வழக்கத்தில் இருக்கிறது.

காகித மலர் – ழ்ஜான் பாரெ

உறுதியான கொடியையும் அதன் பிரகாசமான காகிதங்களைப் போல இருந்த இளஞ்சிவப்பு மலர்களையும் சோதித்த கம்மர்சன் அசந்துபோனார்.
’’பாரெ, இம்மலர்கள் மிக அழகியவை’’என்ற கம்மர்சனிடம் ’’ இவை மலர்கள் அல்ல, பிரேக்ட் (Bract) எனப்படும் மலரடிச் செதில்கள் , உள்ளே சிறிய குச்சிகளை போல வெண்ணிறத்தில் இவற்றினால் மறைக்கப்பட்டுள்ளவைதான் உண்மையில் மலர்கள் ‘’ என்றார் பாரெ.

மருதாணி

பண்டைய இந்தியாவின் உடற்கலையின் ஒரு முக்கிய வடிவமாக மருதாணி இலைச் சாற்றின் சித்திரங்கள் இருந்து வருகின்றன. அக்காலப் பெண்கள் தங்கள் மார்பில் மருதாணிச் சித்திரங்களை வரைந்துகொள்வது ’தொய்யல்’ எனப்பட்டது.

குங்குமப்பூவே!

கிராமங்களால் சூழப்பட்டிருக்கும் சிறு  நகர்களில், மகப்பேறு  மருத்துவமனைகளுக்கும் கிளினிக்குகள்  அருகிலிருக்கும் சின்னச் சின்ன மருந்தகங்களில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமச்சிமிழ்  போன்ற  சிறு   பெட்டிகளில்  700 லிருந்து 1000 ரூபாய்கள் வரை கொடுத்து சில கிராம்  குங்குமப்பூ வாங்கி செல்லுவதை  சாதாரணமாகக்  காணலாம். உண்மையில்  இந்த ஏழை எளியவர்கள் வாங்கிச் “குங்குமப்பூவே!”

காடு

This entry is part 2 of 2 in the series காடு

நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப் படத்திற்காக மூன்று மாதங்களாக இங்கேயே இருக்கிறாராம். வாட்டிய ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டுவிட்டுப் ஃப்ளாஸ்க்கில் கருப்புக் காபியுடன் வந்தால் மாலைதான் அறைக்கு திரும்புவது, சில சமயங்களில் இரவிலும் காத்திருக்கிறாராம். அவரின் இந்த அர்ப்பணிப்பு வியப்பை ஏற்படுத்தியது. தொலைக்காட்சியில் விலங்குகள் குறித்த ஆவணப் படங்களை ஒரு நொடியில் மாற்றி அடுத்த சேனலுக்குத் தாவியிருக்கும் பலநூறு சந்தர்பங்களை எண்ணி வெட்கினேன்.

சருமம், டாக்டர் மற்றும் முனைவர்

பின்னர் மருத்துவர் தகுந்த பாதுகாப்புடன் உடற்கவசம், முகக்கவசம், முகத்தின் மேல் மற்றுமொரு வெல்டிங் செய்பவர்கள் அணிவது போன்ற பாதுகாப்புக் கவசமென்று அணிந்து உயிரி ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் போரில் கலந்துகொள்ளும் வீராங்கனையைப்போலவும், தமிழ் சினிமாக்களில் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணரைப்போலவும் வந்து இருக்கையில் அமர்ந்தார்.

வாஷோகுவும் வஸாபியும்!

ஜப்பானிய உணவுகளில் மிக முக்கியமானது சுஷி மற்றும் சஷிமி. இவ்வுணவுகளுடன் தவறாமல் பச்சை நிறத்தில் மிகச்சிறிய அளவில் விழுதாக அளிக்கப்படும் ஒரு துணை உணவே வஸாபி. வஸாபியைச் சுவைத்தவர்கள், கேள்விப்பட்டிருப்பவர்கள், அதன் பச்சை நிறத்தைக்கொண்டு அது ஏதோ ஒரு செடியின் இலைகளின் பசையென்றோ அல்லது செடியை அரைத்த விழுதென்றோ நினைக்கக்கூடும்.

பியர்: கசக்கும் உண்மைகள்

பியரின் கசப்புச் சுவை சர்வதேசக் கசப்பு அலகில் IBU (International Bittering Units) அளவிடப்படும். வெவ்வேறு வகையான பியர்களின் கசப்புச் சுவையை அளவிட்டு விளம்பரப்படுதுகின்றன பல பியர் தயரிப்பு நிறுவனங்கள். IBU அலகின் வரம்பு 0 – 1,000 ஆகும், ஆனால் மனிதச் சுவை ஏற்பிகள் அதிகபட்சமாக 120 IBU கசப்பை மட்டுமே ஏற்க முடியும்.

இணையவழி: கற்றலும் கற்பித்தலும்

பல வண்ண உடைகளில் கிளர்ந்து ஒளிரும் இளமையுடன் இருக்கும் மாணவர்களைக் கண்ணுக்கு கண் சந்தித்துப் பாடமெடுத்ததற்கும் மாற்றாக, நான் யாரை நோக்கிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதே தெரியாமல், நான் பேசிக்கொண்டிருப்பதை யாரேனும் கவனிக்கிறார்களா இல்லையா என்றும் தெரியாமல் 40 / 50 நிமிடங்கள் பேசுவதென்பது பெரிய கொடுமையாக இருந்தது.