சான் ஃப்ரான்சிஸ்கோ நகரின் தெருக்களில் கயோட்டி ஓநாய்கள் ஓடின. அமெரிக்கக் கோமான்கள் புழங்கும் மார்த்தாஸ் வைன்யார்ட் என்ற ஊரில் வான்கோழிகள் காலியான வீடுகளின் கூரைகளைப் பிடித்துக் கொண்டன, விளைவு தெருக்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பாரிஸ் நகரில் பெருங்கொம்புள்ள கலை மான்கள் நிழற்சாலைகளில் உலாப் போயின, துருக்கியில் மாநகரப் புறநகர்களில் காட்டுப் பன்றிகள் கூட்டங்களாக படையெடுத்தன. ஆஸ்த்ரேலியாவின் அடலெய்ட் மாநகரில் கங்காருகள் நகர் மையத்தில் குதித்தோடிக் கொண்டிருந்தன. வேல்ஸ் மாநிலத்தில் காட்டுச் செம்மறி ஆடுகள் கிராமப் புறங்களில் எங்கும் ஓடின. சிலே நாட்டின் சாண்டியாகோ நகர மையத்தில் சிறுத்தைகள் உலவின.