இங்கே மேடம் லிஸ்பனேயைப் பற்றி எந்தச் சுவடுமில்லை. புகைக்கரி அதிகமாக மண்டியிருந்து கணப்படுப்பில். புகை போக்கியை ஆராய்ந்ததில் (சொல்வதற்கே அச்சம் தரும் ஒன்று) தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்த மகளின் உடல் தென்பட்டது. அது கீழே இழுக்கப்பட்டது. அந்தச் சிறிய துவாரத்தில் குறிப்பிடத்தகுந்த நீளத்திற்கு அந்த உடல் பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ளதைப் பார்த்தார்கள். அந்த உடலைப் பார்வையிடுகையில் அதன் தோல் உரிந்து இருந்ததும், வன்முறையாக அந்த உடல் உந்தி மேலே தள்ளப்பட்டிருந்ததும், துண்டிக்கப்பட்டதுமான கோரக் காட்சியைக் கண்டார்கள்