மன்னார்குடி சாவித்ரி அம்மாள்

மற்ற பத்திரிகைக் களஞ்சியங்கள், இணைய தேடல்கள், மூத்த ரசிகர்களுடன் உரையாடல்கள் மூலம் கடந்த ஒரு வருட காலமாக சாவித்ரி அம்மாளைப் பற்றி தகவல்கள் சேகரிக்க முயன்றேன். அந்த மேம்போக்கான தேடலில் அதிகம் ஒன்றும் கிடைக்கவில்லை. நான் வேறு வேலைகளில் கவனத்தைத் திருப்பினேன். சில வாரங்களில் தற்செயலாக மிருதங்க வித்வான் கே.எஸ்.காளிதாஸ், அவருடைய யூடியூப் சானலில் சாவித்ரி அம்மாளின் பதிவு ஒன்றை வலையேற்றினார். அந்தப் பதிவைக் கேட்ட போது கல்கி குறிப்பில் உள்ள ‘நிதானம்’, ‘அழுத்தம்’ என்ற வார்த்தைகளின் பொருத்தத்தை உணர முடிந்தது.

அளவுமீறா அமுதப் பெருக்கு

கையாளுவதற்கு கடினமான கருவிகளில் நாகஸ்வரமும் ஒன்று. வாசிக்கப் படும் சூழல், வாத்தியத்தின் எல்லை, வாசிப்பவரின் திறன் என்ற விஷயங்களைப் பற்றிய பிரக்ஞை எல்லாம் மறைந்து வாசிக்கப்படும் ராகம் மட்டுமே வாசிப்பவரையும், கேட்பவரையும் ஆட்கொண்டு வெளிப்படுத்திக் கொள்ளும் தருணங்களை நாகஸ்வர கச்சேரிகளிலேயே அதிகம் காண முடியும். அப்படி பல மணி நேரங்களுக்கு தொடர்ந்து வாசிக்கும் போது அவ்வப்போது வாசிப்பில் பிசுறுகள் தோன்றுவதுண்டு. காருகுறிச்சியாரின் வாசிப்பில் நமக்குக் கிடைக்கும் பதிவுகளில், வற்றாது பெருகியோடும் கற்பனைப் பெருக்கில் எத்தனை நுட்பமான சங்கதியை வாசித்த போதும், அவர் மனம் நினைத்ததை ஸுஸ்வரமாய் அவர் வாத்தியம் வெளிப்படுத்தியுள்ளதை உணர்ந்துகொள்ள முடியும்.

காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும்

சோமுவின் முதல் அகாடமி கச்சேரியைப் பற்றிய குறிப்பு, ”ஸ்ரீ சோமசுந்தரத்துக்கு வெகு அபூர்வமான சாரீரம் வாய்த்திருக்கிறது”, என்கிறது. 1960-களிலும் 1970-களிலும் சோமு பாடியுள்ள பல பதிவுகள் இன்றும் கேட்கக் கிடைக்கின்றன. அவற்றைக் கேட்கும் போது சோமுவுக்கு இயற்கையில் சாரீரம் கனமாகவும் அதே சமயம் எளிதில் வளையும் (pliant) தன்மை கொண்டதாகவும், அதி துரித சஞ்சாரங்களை அநாசாயமாக வெளிப்படுத்தக்கூடியதாகவும் அமைந்திருந்தது. பொதுவாக கேட்கக் கூடிய குரல்களில் மந்த்ர ஸ்தாயி பஞ்சமத்திலிருந்து …

ரசிக’மணி’கள்

கான கலாதரர் மதுரை மணி ஐயர்.  கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்குக் கூட இந்தப் பெயர் தெரிந்திருக்கும். கர்நாடக சங்கீதத் துறையில் பல விசேஷமான பட்டங்களுண்டு. அந்தப் பட்டங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேலான கலைஞர்களை கௌரவிக்கப் பயன்பட்டிருக்கும். ஆனால் ‘கான கலாதரர்’ என்கிற பட்டம் மணி ஐயருக்கு மட்டுமே “ரசிக’மணி’கள்”

சால கல்லலாடு

ரத்தினம் பிள்ளை வருகிறார் என்றாலே உள்ளூர் நாயனக்காரர்கள் ஊரைக் காலி பண்ணாத குறைதான். அவர்களுள் யார் இவருக்கு ரெண்டாவது நாயனம் வாசிக்க வருவார்கள். அதிலும் அவர் வாசித்த இடைபாரி நாயனத்தை அந்தக் காலத்தில் வேறு யாரும் வாசித்ததில்லை.

காருகுறிச்சியைத் தேடி…

This entry is part 1 of 3 in the series காருகுறிச்சி

“ஏழாம் திருநாளைக்கு…”, என்று சொல்ல ஆரம்பித்துப் பேசமுடியாமல் திக்கி நிறுத்தினார் அந்தப் பெரியவர். அவர் வாயிலிருந்து வார்த்தை வராமல் நின்றதும் அவர் உடலில் ஓர் அலை எழுந்தது. வயிற்றிலிருந்து எழுந்த அந்த அலை, மார்பில் படர்ந்து, கழுத்தில் ஏறி, அவர் தலையைச் சிலுப்பி இறுதியாய் அவர் கைகள் இரண்டையும் உதறச் செய்யவைத்து அடங்கியது.

நேனெந்து வெதுகுதுரா

அருணாசலத்துக்கு வேம்புவின்மேல் இருந்த அபிமானத்தால் சம்பாவனையே இல்லாமல் கச்சேரி செய்வான். ஆனால் கச்சேரி நடக்க இன்னும் எத்தனையோ செலவுகள் உண்டே. மேடை போட வேண்டும். ஜனங்கள் உட்கார்ந்து கேட்க பந்தல் போட வேண்டும். ஒலிப்பெருக்கிகளுக்குச் சொல்லவேண்டும்.