டார்வின் தன் புத்தகத்தைப் பிரசுரிப்பதில் இருபது வருடங்கள் தாமதம் காட்டி இருந்ததற்குக் காரணம், தன் மனைவி எம்மாவுக்கு மனத் துன்பம் கொடுப்பது பற்றிய அச்சம்தான். மரபுவழி ஆங்கிலிகன் கிருஸ்தவரான எம்மா, இறுதித் தீர்ப்பை நம்பினார், மரித்தவர்கள் மீண்டும் உயிர் பெறுவர் என்பதையும், வேறு உலக வாழ்வு கிட்டப் போகிறது என்பதையும் முழுதும் நம்பினார்.