ஸீபால்டை வாசித்தல் அல்லது தொடர்படுத்தல்களின் கிறுகிறுப்பு

“பெலிண்டாவின் உலகப் பயணம்” என்ற கதையில் சிறுமியொருவள் தன் பொம்மையைத் தொலைத்து விடுகிறாள். அது தன் பொம்மைத் தோழனால் உலகப் பயணம் ஒன்றிற்காக அழைக்கப்பட்டிருக்கிறது என்று அச்சிறுமியை அவள் குடும்ப நண்பரொருவர் (ஹெர் காஃப்கா) நம்ப வைக்கிறார். அதன்பின் உலகின் வெவ்வேறு இடங்களிலிருந்து அப்பொம்மை எழுதுவது போல் காஃப்கா சிறுமிக்குக் கடிதம் எழுதுகிறார். மீண்டும் இலக்கியச் செயல்பாடு ஒரு தனிநபர் நெருக்கடிக்கான தீர்வாக முன்வைக்கப் படுகிறது.