இச்சட்டம் யாரையும் பாகுபடுத்தவில்லை. இது அனைத்து மத இந்தியர்களுக்கும் பொதுவானது. இதன் வரலாற்றைப் பார்த்தால் முகம்மதியர்களை அவமதிக்கும் புத்தகங்களைத் தடை செய்வதற்கும் ஹிந்துக்களின் வாயை அடைப்பதற்குமாக ஏற்படுத்தப்பட்ட சட்டம் என்று தெரிகிறது. இச்சட்டம் ஹிந்துக்களை ஆதரிக்கிறது, ஹிந்துக்களுக்கு மட்டுமே பாதுகாப்பு சலுகை அளிக்கிறது எனும் டானிகரின் மறைமுகமான குறிப்பீடுகள் இரண்டுமே தவறு. …மாறாக, ஹிந்துக்களுடன் எதிருக்கெதிராக ஒப்பிட்டால் இச்சட்டம் சிறுபான்மையினருக்குதான் சலுகை அளிப்பதாக உள்ளது.