நவீனப் போர்விமானங்கள்

பனிப்போரில் உளவறிவது மிகவும் தலையான ஒன்றாக இருந்தது.  அப்படி உளவறிவதற்கு விமானங்கள் மிக உயரத்தில் அதிக நேரம் பறக்கவேண்டியிருந்தது.  அப்படிப்பட்ட விமானங்களுக்கு அவை பறக்கும்போதே எரிபொருள் நிரப்பவேண்டும்.  அந்த உயரத்திலிருந்து எதிரிநாட்டின், அதாவது, மாற்றுக்கொள்கை நாட்டின் இராணுவ அசைவுகளையோ, தளவாடக் கிடங்குகள், அணு உலைகள், இன்ன பிறவற்றின் இருப்பிடங்கள் இவற்றைப் படம் பிடிக்கவும் காமிராவின் சக்தியை அதிகப்படுத்தவும், அவற்றைத் தானாக இயக்கவும் நுண்ணறிவு பெறவேண்டிவந்தது.

வாயுக்கூண்டும் ஊதுபைகளும்

சீனாவின் முன்னாள் அதிபர் தெங்-சியோ-பிங், “நடுவண் கிழக்கு நாடுகளிடம் எண்ணெய், சீனாவிடம் அரிதான கனிமங்கள் – இவை உலக ஆதிக்கத்திற்கு முக்கியம்,” என 1987ஆம் ஆண்டிலேயே வலியுறுத்தியுள்ளார். மற்ற நாடுகளின் – முக்கியமாக அமெரிக்காவின் பலம் – அதன் பலவீனம் – அது எப்படி தனக்குள் இரகசியத் தகவல் பரிமாற்றம் செய்துவருகிறது என்பதை உளவறியச் சீனா விரும்புகிறது.  “எதிரியின் பலம்-பலவீனத்தை அறிவதே ஒரு படைத்தலைவனின் தலையாய கடமை;  அப்படி அறிபவர்தான் எதிரியை வெற்றிகொள்கிறார்,” என்று ‘போர்க்கலை’ எழுதியுள்ள சீனப் பேரறிஞர் சுன்-சூவின் அறிவுரையை அது பின்பற்றி…