யோகம் இந்துக்களுடையதா எனும் கேள்வியின் முகமதிப்பு என்ன?

மதச்சார்பற்றவர்களின் திட்டத்தில் ஒரு முக்கியப் பகுதி இந்து மதத்தைக் கீழ்மைப்படுத்துவதாகும். இந்து சமுதாயத்தில் காணப்படும் தீமைகளுக்கும் தீமைகளாக எண்ணப்படுவதற்காக இந்து மதத்தைப் பழித்தலும் நல்லவைகளையும் நல்லவைகளாக எண்ணப்படுபவைகளின் சம்பந்தத்தை உடனடியாக இந்து மதத்திலிருந்து கழித்துவிடுதலும் இவர்களின் தொழிலாகும்.

சர்வதேச யோகா நாளில் ‘ஓம்’ சின்னம் இடம்பெற்றதா? வெளியேற்றப்பட்டதா?

மதச்சார்பின்மைதான் எங்களது நோக்கம் என்று கூறும் இயக்கங்களின் உண்மையான இலக்கு, ஹிந்துத் தன்மையை நிர்மூலமாக்குவதே என்பது என் அபிப்பிராயம். பா.ஜ.க. இந்துக்களை ஆதரிக்கும் கட்சி என நினைப்பவர்கள், அக்கட்சி இத்திட்டத்தை ஆதரித்தது என்றறிந்தால் ஆச்சரியப்படுவர்.

யோகாப்பியாசம் இந்துக்களுடையதா?

முதலாவதாக, யோகம் இந்துக்களை சேர்ந்ததுதான். ஹிந்து மதம் என்பது இந்தியாவில் உள்ள, உருவ வழிப்பாட்டை அடிப்படையாகக்கொண்ட மத மரபுகள் அனைத்தும் சேர்ந்ததாகும். தொன்றுதொட்ட காலமாக இருந்துவரும் மரபுகளும் இதில் அடங்கும். எனவே, யோகம் இந்து மதத்தைவிடப் பழமையானது எனும் தீபக் சோப்ராவின் கூற்று வேடிக்கையான ஒன்று.