பிலடெல்பியா, அமெரிக்காவின் பழைய தலைநகரம் என்பதை அறிவீர்கள். வடமேற்காலே ஒரு 16 மைல் ஸ்கைகுல் (Schuylkill) நதியை ஒட்டிப்போகும் 202- பெருஞ்சாலையில் போனீர்களென்றால் நிச்சயம் இந்த ஊரை அடையலாம்.
1769 களில் வந்த ஒரு ஜெர்மானிய வந்தேரி, ஜேம்ஸ் பெர்ரி, தனது மன்னர் பெடரிக் II மேல் இருந்த விசுவாசத்தைக் காட்ட, மதுக்கடையின் பெயர்ப்பலகையில் ‘கிங் ஆப் பிரஷ்யா’ என்று பெயர் எழுத, அதுதான் அந்த ஊரின் பெயர் என்று ஒரு சோம்பேறி ஆங்கிலேய சர்வேயர் இலவச விருந்திற்கு பிறகு, இரண்டுக்கு மேல் போட்ட பெக்கினாலோ என்னவோ, அதையே கிராமத்தின் பெயர் என்று தன் பதிவேட்டில் குறித்துக் கொண்டு போனதாக ஒரு கதை உண்டு.