பலரும் என் சகோதரியின் கைகளைப் பார்த்து அவற்றை நேசிக்கத் துவங்குகிறார்கள். அவளால் ஒரு செங்கல்லை இரண்டாக உடைக்க முடியும். எங்கள் சகோதரனுக்கு 30 வயதாகிற போது, அவன் அவளோடு தங்கி இருக்க வந்தான். தான் மணந்திருத்த பெண்ணை விட்டு விலக அவன் முடிவு செய்திருந்தான், என் சகோதரி வாழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு சிறிய ஏரியில் மூழ்கி இறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவள் சொன்னாள், “அது முழுக்க உளை சேறாக இருக்கிறது, நீ ரொம்ப தூரம் உள்ளே இறங்கி நடந்தால்தால் ஏதோ கொஞ்சம் ஆழம் கிட்டும், அதில் மூழ்குவது உனக்குப் பெரும் பாடாக இருக்கும்.” எங்கள் சகோதரன் தலையைப் பின்னே சாய்த்துப் பெருஞ்சிரிப்பாகச் சிரித்தான்.
ஜாய் வில்லியம்ஸின் “கடவுளைப் பற்றிய 99 கதைகள்”
தற்செயலான துப்பாக்கிச் சூட்டிற்கு ஊரின் தென்பகுதியில் உள்ள ஒரு குழந்தை பலியானது. ஏழே வயதான அவன் பலியாகியிருக்கத் தேவையில்லை. சொல்லப்போனால் யாருமே பலியாகியிருக்கக்கூடாது. துப்பாக்கி வைத்திருந்தவன் அந்த குறிப்பிட்ட வீட்டில் உள்ளவர்களுக்கு பயம் காட்ட நினைத்தான்.