ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி?

ஒரு கருப்பினப் பெண்ணாக,  வழக்கமாக இத்தகைய மாநாடுகளில் செய்வதைப் போலவே,  நீங்கள்,  அங்கு வந்திருக்கும் நீக்ரோக்களை எண்ணும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நூறு பேர்களுக்கும் மேலானவர்கள் குழுமியிருக்கும் அந்த மாநாட்டில்,  அவர்  பன்னிரண்டாம் நபர். மாநாட்டின் முதல் நாளன்று, நகரும் படிப் பாதையில் நீங்கள் மேலேறிச் சென்று கொண்டிருக்கும் போது, அவர் கீழே இறங்கிக் கொண்டிருப்பதை கவனிக்கிறீர்கள். எந்த சுருக்கப் பெயரால் அவரை அடையாளப் படுத்தலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். அவரது சிறிய குச்சி முடி,  “கவிஞர்” அல்லது “உயர்நிலைப்பள்ளி கணக்காசிரியர்” என்னும் இரு  அடையாளங்களுமே,  அவருக்கு சமமாக பொருந்துவதாக எண்ண வைக்கிறது.

ஸர்கம் கோலா

குளிர்காலத்தில், சூரியன் மிக விரைவாக அஸ்தமித்துவிடும். மிருதுவான கம்பளித் துணிகளைத் தழுவியபடி, உற்சாகம் தரும் காற்று, கலைக்கூடங் களையும், அரங்குகளையும் நிறைத்திருக்கும். அக்காற்றில் கலந்திருக்கும் மணம், ஆண்மையற்றவர்களை, ஆண்மை நிறைந்தவர்களாகவும், ஆண்மை மிகுந்தவர்களை ஆண்மை குறைந்தவர்களாகவும் மாற்றும் வல்லமை படைத்தது. மக்கள் கலைகளிலும் கலாச்சாரத்திலும் மூழ்கிக் கிடப்பார்கள். கலாச்சாரமும் கலைகளும் மக்களுக்குள் நிறைந்து ததும்பும்.

பள்ளி ஆய்வாளர்

பள்ளி ஆய்வாளர் பதில் பேசவில்லை. இந்த மாதிரி பள்ளிகளை மாவட்டம் முழுவதும் துரத்தித் திரிவது அயர்ச்சியான வேலையாக இருந்தது. அழுக்கடைந்த நகரங்களில், சிதிலமான பகுதிகளில், அவருடைய வாகனம் செல்லமுடியாத தூரத்து மூலைகளில் கிடக்கும் கிராமங்களில். அப்புறம் அந்த பள்ளிக்கூடங்கள் இருக்கும் அவலமான நிலை. இவை எல்லாம் அவருடைய மனதை அழுத்தின. இந்த மூன்று ஆண்டுகளில் இவையெல்லாம் அவருக்குப் பழகிப்போயிருக்க வேண்டும். ஆனால் இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கூடமும் இப்போதும் வலியேற்படுத்தத்தான் செய்கிறது.

சாவைப் படைத்த எழுத்தாளன்

‘என்னால வர முடியும்னு தோணலைப்பா!’ அவர் சன்னமாகச் சொன்னார், சிறுமையைத் தரித்தவராகத் தெரிந்தார். ‘அந்த ஜன்னல் வழியே நான் பார்த்தால், எனக்குத் தெரியறதெல்லாம் இரண்டு பரிமாணத்தில்தான் இருக்கிறது.’
நாங்கள் திரும்பி, இருவருமாக அங்கே பார்த்தோம். வெளியே ஒளி மங்கிக் கொண்டிருந்தது. ‘அது கூட அத்தனை கிடையாது,’ என்றார் அவர். ‘எனக்கு ரெண்டே வாக்கியங்கள் தான் கிடைக்கிறது. “வெளியே குளிராக, சாம்பல் நிறமாக, தட்டையாகத் தெரிந்தது.” அடுத்து, “சில இலைகள் ஆடி அசைந்து அந்த மரத்திலிருந்து மெதுவாகக் கீழே அந்த நடைபாதை மீது விழுந்தன, அவை பழுப்பாகவும், தங்க நிறமாகவும், செத்துப் போனதாகவும் இருந்தன.” அவ்வளவுதான்.’

சென்சினி

இச்சிறிய எழுத்துலகம் ஆபத்தானது, அதே நேரத்தில் அபத்தமானது என்று எழுதியிருந்தார். கூடுதலாக அவர் சொன்னார், ஒருவரின் கதை ஒரே நீதிபதி முன் இருமுறை வந்தாலும் அதில் ஆபத்து குறைவுதான். ஏனென்றால், அவர்கள் வரும் கதைகளைப் பொதுவாகப் படிப்பதில்லை அல்லது மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலும் “குதிரை வீரர்கள்” கதையும், “கவலைகள் இல்லை” கதையும் வெவ்வேறு அல்ல என்பதை யார்தான் சொல்லக்கூடும், தலைப்புகளிலேயே அதன் தனித்தன்மைகள் தெளிவாக உறைந்திருக்கும்போது? ஒற்றுமைகள் உண்டு, அதிக ஒற்றுமைகள் உண்டுதான், ஆனாலும் அவை வெவ்வேறு.

வில்லியம் பர்ன்ஸ்

ரொபெர்த்தோ பொலான்யோ (தமிழாக்கம் : ஆகாசஜன்) கலிஃபோர்னியாவில் இருக்கிற வெண்டுராவைச் சேர்ந்த வில்லியம் பர்ன்ஸ், இந்தக் கதையை என் நண்பன் பாஞ்சொ மொங்கேவிடம் சொன்னான். சொனோராவில் சாண்டா தெரேசாவில் போலீஸ்காரனாய் இருக்கிற பாஞ்சொ மொங்கே, அதை என்னிடம் சொன்னான். அந்த வட அமெரிக்கன் எதற்கும் கோபப்படாதவன், எதற்கும் அலட்டிக் “வில்லியம் பர்ன்ஸ்”