ஆட்டத்தின் ஐந்து விதிகள் – மூன்றாம் விதி

பத்து நிமிடங்களுக்கு நண்பனின் அப்பா பயன்படுத்திய கடுஞ்சொற்கள்தாம் விஷயத்தை விபரீதமாக்கின – “உன் முகத்தில் ஏமாளி என எழுதி ஒட்டியிருக்கிறது , உனக்கு பணத்தின் அருமை தெரியவில்லை, நீ சம்பாதித்திருந்தால் தெரியும் அதன் அருமை, ஒரு சட்டை வாங்கத் துப்பில்லாத நீ எப்படி வேலைக்குப்போய் குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறாய்? கல்லூரிக்குப் போகப்போகிறாயா , கூத்தாடப் போகிறாயா ? “ – இன்னும் எழுத முடியாத அளவுக்கு வார்த்தைகள்.