தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி

சாதாரண மனித ஆற்றல்களையும், நம் புலன்களுக்குத் தென்படக் கூடிய இயற்கை ஆற்றல்களையும், ஒலி, ஒளி, கதிரியக்கம் போன்ற அறிவியல் ஆற்றல்களையும் மீறிய பல வித ஆற்றல்கள் நிறைந்ததே இப் ப்ரபஞ்சம். இன்னும் சொல்லப் போனால் ப்ரபஞ்சம் முற்றிலுமே இத்தகைய ஆற்றல்கள் நிறைந்ததுதான். ஆற்றல்கள் இன்றி இப் ப்ரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளும், உயிரும், துகளும், அணுவும், மன இயக்கங்களும் இல்லை. சாதாரண மனித ஆற்றல்களுக்கும், இயற்கை ஆற்றல்களுக்கும், அறிவியல் ஆற்றல்களுக்கும் அப்பாற்பட்ட அத்தகைய ஆற்றலே அமானுஷ்ய ஆற்றல் (occult power) எனப்படுகிறது.