மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு

அந்த கர்ப்பத்துக்கு ஆறு மாதம் முந்தி ஒருதடவை நீ ப்ரக்ணண்ட் ஆனே ஞாபகம் இருக்கா? பிள்ளைதான், வயத்துலே உதைக்கறான்னு சொன்னே. திடீர்னு ஒரு நாள் காலம்பற, அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை.. உங்கப்பா, தம்பி, சித்தப்பா கரோல்பாக்கிலே வீட்டு  செப்டிக் டாங்க் ரிபேர் பண்ணிண்டு இருக்கான்னு வந்து டாய்லெட்டை நாறடிச்சாளே,  நம்பூதிரி தந்தசூரணம் பல்பொடி நெடி எங்கேயும் அடிச்சுண்டிருக்க நீ என்னை பாத்ரூமுக்கு கூப்பிட்டே. அந்தக் கர்ப்பம் கலைஞ்சு போச்சுன்னு அழுதுண்டே சொன்னே. ஞாபகம் இருக்கா. அது ஆம்பளைக் குழந்தைதானே. அந்த கரு இன்னும் உசிரோட இருக்கு. நான் பார்க்கலே. அப்பா அப்பான்னு கண்ட்ஹர்லே ப்ளேன்குள்ளே வந்து என்னைத் திட்டறதோ, நல்லதா நாலு வார்த்தை சொல்லறதோ தெரியலே. நல்ல வார்த்தை சொல்ல நான் ஒண்ணுமே செய்யலியே.

மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று

இன்னொரு விசாரணை இழை, லிஸ்பனில் இருந்தபடிக்கே சென்னாவை ஓய்த்து உட்கார வைக்க நிகழக்கூடிய சதி பற்றியது. சக்தி குறைந்த வெடிவெடிப்பில் இருந்து தொடங்க வேண்டும்.  சக்தி அதிகரித்து, நெருப்புப் பற்றி வெடித்ததுமே அடுத்து நிற்கும் ஆளைக் கொல்லும் அதிக அளவு வெடியுப்பு கலந்த வெடிகளை உருவாக்க  வேண்டும். அவற்றை உபயோகப்படுத்திக் கூடுதல் நாசம் விளைவிக்கும் முயற்சிகளை மேலெடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் அழிவு தான் குறிக்கோள். சிறுவர்களை முன்னால் நிறுத்தி வட்டத்துக்கு உள்ளே செயல்படுகிறவர்கள் அந்தத் தீவிரவாதிகளாக இருக்கக் கூடும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு, நடக்கக் கூடியது என்ற வகையில் பட்டது. சாட்சியங்களோ ஆதாரங்களோ எதுவும் இல்லாத, தர்க்கரீதியான ஆய்வுமுடிவு.

இரா. முருகனின் நளபாகம்

This entry is part 44 of 48 in the series நூறு நூல்கள்

முருகன் சொற்பமான இவ்வரலாற்றுத் தரவுகளைச் சாரக்கட்டாகப் பயன்படுத்தி நானூறு ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் இரு நூற்றாண்டு முடிவுகளில் (பதினாறாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இறுதி) அரசியல், ராஜதந்திரம், வஞ்சகம், போர், பொது மக்கட்கருத்துத் திரிபு, தீவிரவாதம், மதச்சார்பு, நட்பு போன்றவற்றை பாவிழையாகவும் உணவையும் காமத்தையும் அவற்றிற்கு மேலும் கீழும் ஓடும் ஊடு நூலாகவும் பின்னிப் பிணைத்து ஒரு மாபெரும் கதையாதலை நெய்கிறார். பதினாறாம் நூற்றண்டிலிருந்து திரண்டு வரும் இக்கதையாடல்கள் பரமன் என்ற பாத்திரத்தின் வழியே இருபதாம் நூற்றாண்டிறுதியில சன்னமாக எதிரொலித்து புது அர்த்தங்கள் கொள்கின்றன.

மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு

அவர் விமானம் ஏறும்போது கல்பா, மருது இன்னும் மருதுவின் ஆப்பிரிக்க நண்பர்கள், தோழிகள் என்று ஒரு கூட்டமே ஹீத்ரோவ் விமான நிலையத்துக்கு அவரை வழியனுப்ப வந்தது. “போய்த்தான் ஆகணுமா, அதுவும் இந்த சங்கடமான நேரத்திலே?” என்று கல்பா கேட்டாலும், அவளுடைய அப்பா திலீப் ராவ்ஜிக்கும், தம்பி அனந்தனுக்கும் சிறுசிறு பரிசுகள் அடுத்த வாரம் வரும் புத்தாண்டுக்காக பிஷாரடி வைத்தியர் மூலம் தான் அனுப்பி வைக்கிறாள்.

மிளகு அத்தியாயம் இருபத்தொன்று 

பரமனுக்கு தாகம் எடுத்தது. பசி வேறே. விமானத்தில் கொடுத்த ரொட்டித் துண்டுகளும், சின்ன பாட்டில் ஜாமும், பொங்கலுக்கும் உப்புமாவுக்கும் இடைப்பட்ட ஏதோ இந்தி ஆகாரமும் பரமனின் கைப்பையில் இருப்பதால் பசி விஷயம் அவ்வளவு பெரிய உடனடிப் பிரச்சனை ஆகாது. என்றாலும் தாகத்துக்குத் தண்ணீர்? இந்தத் தாங்கு கட்டைகள் வேறே, எங்கே போனாலும் எடுத்துப் போக வேண்டியிருக்கிறது. அவை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

மிளகு அத்தியாயம் பதினெட்டு

அப்பக்காவும் சென்னாவும் கூட நல்ல நண்பர்கள் ஆனதால் சென்னாவுக்கும் அந்தத் தம்பதிகளுக்கும் இடையில் மிக நல்ல உறவு உலவியது. இப்போது வீராவும் அப்பக்காவும் பிரிந்து இருந்தாலும் சென்னா மறுபடி அவர்கள் ஒன்று சேர இன்னும் முயற்சி செய்கிறாள். மிளகை சென்னாவும் வெல்லத்தையும் சாயம் தேய்த்த கைத்தறித் துணியையும் அப்பக்காவும் இந்த வடக்கு கன்னடப் பிரதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்வதை ஒருங்கிணைத்து பிரம்மாண்டமாக வியாபாரம் வளர்த்தால் விஜயநகரப் பேரரசு கூட பிரமித்துப் போய் பார்க்கலாமே தவிர வேறேதுவும் செய்ய முடியாது.

மிளகு அத்தியாயம் பதினான்கு

“எனக்கு வெங்காயம் இல்லாத மசாலாவும் சப்பாத்தியும் ராத்திரி சாப்பாடாக வேண்டும் என்று கோலாலம்பூரில் இருந்து வரும்போதே பதிந்து கொடுத்திருந்தேன். வைத்திருக்கிறார்களா கேள்”.
அறிவு கெட்ட கிழவா, அவனவன் உசிரு போகப் போகுதுன்னு பயந்து போய் இருக்கோம். நீ வெங்காயம் இல்லாம மசாலா கேட்கறே. நாசமாப் போறவனே
முன் வரிசையில் மூன்று புதுமணத் தம்பதிகள் தேன்நிலவு நேப்பாளத்தில் முடித்து தில்லிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள். அதில் ஒரு பையன் எழுந்து நின்று ஹலோ என்று கூப்பிட சங்கரன் பீதியோடு அவனைப் பார்த்தார்.
“லேடீஸ் வாண்ட் பாத்ரூம் யூஸ்”.

மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்

நாராயண பிஷாரடி வைத்தியர் ஒரு கனவு கண்டார். பேராசிரியர் பிஷாரடி. பிஷாரடி வைத்தியர். எல்லாம் அவர் பெயர் தான். அவர் கண்டது தூசு அடர்ந்த சிறிய ஊரின் வீதிகளில் சைக்கிள் ஓட்டிப் போகும் கனவு.  சைக்கிளை அதி வேகமாகப் பின் தொடர்ந்து கனைத்தபடி ஒரு செந்நாயோ, கடுவன் பூனையோ, “மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்”

மிளகு

திலீப் ராவ்ஜிக்கு அண்டை அயலில் சிநேகிதர்கள், தூரத்து, பக்கத்து சொந்தக்காரர்கள், ஏன், பழக்கமானவர்கள் என்று பலர் உண்டு. இவர்கள் மதியச் சாப்பாட்டுக்கு உட்காரும் நேரம் அவருக்குத் துல்லியமாகத் தெரியும்.
அதற்கு ஒரு மணி நேரம் முன்பே நலம் விசாரிக்கிற தோரணையில் ராவ்ஜி எப்போதாவது அவர்களின் வீடுகளுக்கு அழைக்காமலேயே போவதுண்டு.

மிளகு: அத்தியாயம் ஐந்து

புராதன மாளிகைகளும், வியாபார நிறுவனங்களும் அணிவகுத்து நிற்கும் கருங்கல் பாவிய அகலமான வீதிகளில் மிக விரிவானது அந்த ரதவீதி. அங்கே போர்த்துகீஸ் அரசப் பிரதிநிதி இம்மேனுவல் ராபர்ட்டோ பெத்ரோ Immanuel Roberto Pedro வசிக்கும் விசாலமான மாளிகை. வழக்கமான போர்த்துகீஸ் காலை உணவான சீராக வெண்ணெய் தடவி அனலில் சுட்ட டொர்ரடா (toast), மசித்த காய்கறியும், பன்றி மாமிசமும் இடையில் வைத்த ரொட்டித் துண்டுகள், ஆரஞ்சு பழக்கூழும் தேனும் நிறைத்த பாபோ செகோஸ் (bun), பால் அதிகம் சேர்த்த காப்பி என்று பசியாறிப் பயணத்துக்குச் சித்தமானார் பெத்ரோ.