மிளகு   அத்தியாயம் ஐம்பத்தேழு

வரிசையாக மூன்று சாரட்டுகள் ஐந்து நிமிட இடைவேளையில் வந்து நிற்கின்றன. மிர்ஜான் கோட்டையில் மகாராணி வசிக்கிறார் என்பதோடு அவருடைய பிரியத்துக்குரிய வைத்தியரும் மனைவியும் கூட கோட்டைக்குள் வசிப்பதால், நடந்து கூட வந்திருக்கலாம். மொத்தம் பத்து நிமிடம் தான் பிடித்திருக்கும். ஆனால் பாதுகாப்பு வழிமுறைகள் அதை அனுமதிப்பதில்லை என்பதால் ரதங்கள் குதிரை பூட்டி வரவேண்டியிருக்கிறது. 

மிளகு   அத்தியாயம் ஐம்பத்தைந்து

ஸ்னான கட்டத்திற்குள் காசிரை நுழைந்தபோது ஒரே சிரிப்பும் கலகலப்பான பேச்சுமாக ஒரு நூறு பெண்கள் அங்கே களித்திருந்தார்கள். நீண்டு வளைந்து குளம் போல் பாத்தி கட்டி, ஷராவதியை நடை மாற்றி, கிழக்கு திசையில் கொஞ்ச தூரம் வேகமின்றி மெல்ல அசைந்தாடிப் போகவைத்திருக்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் அரபிக் கடலின் முதல் அலைகள் நிலம் தொட்டுப் போக, குளியல் மண்டபம் விடிந்து கொண்டிருக்கும் பொழுதில் வெளிச்சம் பூசி நின்றது. 

மிளகு  அத்தியாயம்  ஐம்பது

ராத்திரி நீங்களும் நானும் வேறு எந்த முக்கியப் பணியும் இல்லாமல் சந்திப்பை வேண்டும் நேரம் வரைத் தொடரலாம். மதுரையில் இருபத்துநாலு மணி நேரமும் ஊர் விழித்திருப்பதும் ஜனங்கள் விழித்திருப்பதும் இயல்பு. சாயந்திரம் ஆறு மணிக்குக் கல்யாணம் நிச்சயம் செய்து, ராத்திரிஒன்பதுக்கு நகைக்கடையில் நகைகளும், ராத்திரி பத்து மணிக்கு கல்யாணப் புடவை, வேட்டி என எல்லாம் வாங்கி, நள்ளிரவுக்கு பழம், தேங்காய் என்று கல்யாணத்துக்கு வருகிறவர்களுக்கு அளிக்க வாங்கி, இனிப்பும், வேறு பலகாரங்களும் வாங்கி காலை ஆறு மணிக்குக் கோவில் பிரகாரத்தில் தாலி கட்டிக் கல்யாணம் வைக்க அனுமதி பெற்று, ஆறரை மணிக்கு மங்கள இசை ஏற்பாடு செய்து காலை ஏழு மணிக்குக் கல்யாணம் நடத்தி விடலாம்

மிளகு அத்தியாயம்  நாற்பத்தொன்பது 

போன மாதம் பிரார்த்தனை மண்டபத்தை பெரும்பான்மை வைதீக மதத்தினர் அடித்து நொறுக்கி தீர்த்தங்கரரின் நாசியை உடைத்தார்கள். நாம் மௌனமாக இருந்தோம். போன வாரம் புதியதாகக் கட்டப்படும் வசதி முழுக்கக் கட்டாமலிருக்கும்போதே மாமிசத் தாக்குதலை எதிர்கொண்டது. நான்கு தீர்த்தங்கர் சிலாரூபங்கள் மேலும் பசுமாமிசம் விழுந்து தரையில் படிந்து துர்நாற்றத்தைக் கிளப்பி உள்ளே வந்தவர்களை விரட்டுகிறது. அரண்மனைக்கு மிளகு விற்பது தான் குறிக்கோள். போர்த்துகல்லுக்கு எவ்வளவு மிளகு விற்பனையாகுமோ அவ்வளவுக்கு அரசாங்கமும் செழிக்கும்.

மிளகு  அத்தியாயம்   நாற்பத்தெட்டு   

மறுபடி தண்ணீர்க் குளியல். அடுத்து புது மஞ்சளை விழுதாக அரைத்துப் பூசி மஞ்சள் அபிஷேகம். சுத்தமான நீரால் திருமஞ்சனம் செய்வித்தல் அடுத்தது. ஸ்ரீகோவிலும் பிரகாரமும் சந்தன வாசத்தில் மூழ்கி இருக்க, களப அபிஷேகம் அடுத்து, தொடர்ந்து தூய்மையான தண்ணீரால் மஞ்சனம். அடுத்து மல்லிகை, ஜவந்தி, முல்லை, கனகாம்பரம், ரோஜா மலர்கள் கூடை கூடையாக உயர்த்திச் சொரிந்து ஸ்ரீகோவிலையே பூவிதழ்களாலும் நல்ல மலர் மணத்தாலும் மூழ்கியிருக்கச் செய்து புஷ்பாபிஷேகம். 

மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு

வணிகக் கவிதைகள் தலைப்பை பார்த்ததுமே அவை வர்த்தக கவுன்சிலுக்கு அனுப்பப் பெறும். வர்த்தகக் கவுன்சில் ஏதாவது அனுப்ப வேண்டுமென்றால் கவிதை மன்றம் மூலமாக வணிகக் கவிதை தலைப்பில் நேமிநாதனுக்கும் ரோகிணிக்கும் பூடகமான உருவத்தில் வந்து சேர்ந்து விடலாம். யார் கண்டது? வர்த்தகத் தகவல்கள் பற்றி எழுதிய, வேறு யாருக்கும் புரியாத வணிகக் கவிதைகள் சிறந்த கவிதைகளாகக் கொண்டாடப்பட்டு விருது வழங்கப்படலாம். புரிந்தால் அதென்ன கவிதை? 

மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு

மொத்தம் மூன்று சாரட்கள். முன்னால் ஒன்று பாதுகாப்பாகப் பெட்டகத்தில் பணம், துணிமணிகள், உணவு, குடிக்கவும் புழங்கவும் கடகங்களில் தண்ணீர் ஆயுதங்கள் என்று இரண்டு சிப்பாய்கள் காவலிருக்க நகர்ந்து போனது. அடுத்து ராணி பயணம் செய்யும் ராஜரதம் என்ற பெரிய, வசதியான சாரட் நான்கு காவல் வீரர்களோடு நகர்ந்தது. அதன் பின்னால் சற்றே சிறிய இன்னொரு சாரட்,   பல   மருந்துகளோடு வைத்தியனும், அவன் மனைவியும், ராணியின் தாதியுமான   மிங்குவும் அதில் பயணம் செய்து ராணியைத் தொடர்ந்து வந்தார்கள். பின்னால் நான்கு வீரர்கள் குதிரைகளில் சவாரி செய்து மொத்தப் பாதுகாப்பு அளித்தார்கள். 

மிளகு அத்தியாயம் நாற்பது

சென்னா மகாராணி சற்றே முகம் சுளித்தபடி கோவில் படிகளை நோக்கி நடக்கின்றாள். மலர்ந்த வதனமும் நிறைந்த சிரிப்புமாகத்தான் ஜனக் கூட்டங்களை எதிர்கொள்வாள். கைதட்டும் ஜயவிஜயீபவவுமாக அவளை வரவேற்கும் குரல்கள் எங்கே? அவை இருக்கின்றன தான். சென்னா முகம் மலரும் போது அவையும் திரும்பி வரும். வெடி விபத்துகள் காணாமல் போகும்போது அது நடக்கும். வெடிகள் பற்றிய நினைவை கோவில் வாசலில் விட்டுவிட்டு கிருஷ்ணசாமியிடம் சரண் புகுந்திட விசாலமான கோவில் கபாடங்களைத் திறக்கச் செய்து உள்ளே நடந்தாள் சென்னபைரதேவி ராணி. கருவறைக் கதவுகளும் தாந்திரீக சம்பிரதாயத்தில் சார்த்தி வைத்து கிருஷ்ணனை முதுகுப் புறம் மட்டும் காட்டும் இரண்டாவது உத்தர கன்னடக் கோவில் இது.

மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது

அவரவர்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. ராஜகுமாரர் நேமிநாதனுக்கு ஜெருஸுப்பா அரசராக வேண்டும். போர்த்துகீசியர்களோடோ, ஒல்லாந்தியரோடோ சேர்ந்து காசு சேர்க்க வேண்டும். ரோகிணியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். ரோகிணிக்கோ ஒன்று நேமிநாதனோடு முதல் ராணியாக அரசாங்கத்தை நடத்த வேண்டும். ஜெருஸுப்பாவிலும் ஹொன்னாவரிலும் பக்கத்து கிராமங்களிலும் வீடும் மாளிகையும் நிலமும் தன் பெயரில் இருக்க வேண்டும். பரமனைக் கல்யாணம் செய்து கொண்டு நேமிநாதனின் காமக்கிழத்தியாக, புறம்பெண்ணாக இருப்பதில் அவளுக்குக் குற்ற உணர்வு ஏதுமில்லை. பரமனுக்கு இங்கே நடப்பதெல்லாம் எந்த விதத்திலும் அவரைப் பாதிக்காது. ஒரே ஒரு லட்சியம் எப்படியாவது நாக்பூருக்கோ பம்பாய்க்கோ அவருடைய காலத்துக்குத் திரும்பப் போக வேண்டும். அதற்காக என்ன வேணுமானாலும் செய்வார் அவர்.

மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு

நானும் கேலடி அரசரின் ஆதரவைத்தான் முதலில் திட்டமிட்டேன்” என்றான் நேமி. ”எல்லாவற்றுக்கும் அவரை அழைத்து வந்து நடுவில் உட்கார வைத்து தலைப்பாகை கட்டுவது அவருக்கு தன்னைப் பற்றி அதிகமாக ஒரு தோற்றம் மனதில் ஏற்பட வைக்கும். கல்யாண வீட்டிலே மாப்பிள்ளை, சாவு வீட்டிலே பிணம் என்று எல்லா இடத்திலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். பில்ஜி அரசர் திம்மாஜியும் கேலடி அரசர் போல் நாயக்கர் வம்சம். இளம் வயது. நமக்குச் சென்று பழக எளியவர். தேவை வந்தால் கேலடி நாயக்கரையும் அழைத்துக் கொள்வோம்

மிளகு அத்தியாயம் முப்பத்தேழு

”விலை கொஞ்சம் குறைவுன்னாலும் கூடுதல் மிளகு ஏற்றுமதி. அதை அனுப்ப தயார்ப்படுத்த அதிக பேருக்கு வேலை. பயிரிட்டு அறுவடை செய்ய அதிகப் பேருக்கு வேலை. எல்லா வாசனை திரவியங்களுக்கும் இப்படி அதிகப் பேருக்கு வேலை. வெடியுப்பு தயார் செய்ய, அனுப்ப அதேபடி. துணி நெய்ய, சாயம் தோய்க்க, சீராக்கி லிஸ்பன் அனுப்ப அதிகப் பேருக்கு வேலை. அதிகம் வேலை. அதிகம் பணப் புழக்கம். அதிகம் பணம் செலவழிக்க. சேமிக்க. நகை வாங்க. யார் வேணாம்னு சொல்லப் போறாங்க மகாராஜா?”

மிளகு அத்தியாயம் முப்பத்தாறு

வெடியுப்பை வைத்து விளையாடியிருக்கிறார்கள் அவர்கள். தீபாவளி முடிந்து சுவதேசி பட்டாசு தயாரிக்கிற முயற்சியாம். எக்குத்தப்பாக ஒரு சிறு கரண்டி வெடியுப்பை நகக்கண் அளவு இத்தனூண்டு கந்தகத்தோடு கலந்து எரிய விட்டத்தில் ஏதோ வெடிப்பு உண்டாச்சாம். விரல் பிழைத்தது பகவான் கருணை. காயம் சீக்கிரம் ஆற மூலிகைச் சாறு தடவணும். அதுக்குத்தான் பறிச்சுட்டுப் போறேன். ஏற்கனவே நாலைந்து வருஷம் முந்தி இதே மாதிரி வெடியுப்போட விளையாடினாங்க. மூலிகை அரைச்சுப் பத்து போட்டு குணமாக்கினேன். இப்போ அதைவிட அதிகமா வெடியுப்பு. தேவையில்லாத இதர சேர்மானம். அதிகம் மூலிகை. அதிகம் நாள் எடுத்து குணமாகறது”. வைத்தியர் விளக்கினார்.

மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து

கிட்டத்தட்ட இருபது வருஷமாக வந்து போவதால் கொஞ்சம் போல மலையாளம் அவர் நாவில் படிந்து வரும். அது ரெண்டாம் பட்சம். ஒரிஜினல் மலையாளியாக வேட்டியை முழங்காலுக்கு மடித்துக் கட்டியபடி நடக்கவும், தேவையான இடங்களில் மடித்ததை இறக்கி காலில் தடுக்காமல் நடக்கவும் அவருக்குப் பழகி இருந்தது.. தமிழ் நாட்டில் சுற்றுவேட்டி வலது பக்கத்தின் மேல் இடப்பக்கம் படிந்து வரும். கேரளத்திலோ இடப்பக்கத்தின் மேல் வலப்பக்கம் படிந்து வரும். இரண்டு வகையிலும் வேட்டி கட்ட மோதக்குக்குத் தெரியும். வேட்டி மடித்துக் கட்டியபடி ஓடவும் இறக்கி விட்டு முழங்காலில் இருந்து கணுக்காலுக்கு மூட மெல்ல ஓடவும் அடுத்துப் பயிற்சி எடுக்க வேண்டும். இந்தப் பயணத்தில் அதைப் பழகி விடலாம் என்ற நம்பிக்கை உண்டு அவருக்கு.

 மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு

பெத்ரோ அவர்களே, உத்தரவு எல்லாம் யாரும் யாருக்கும் தரவோ பெறவோ வேண்டியதில்லை. எங்கள் அரசியல் அமைப்பில் பாதுகாப்புப் பணியை அதற்கான கட்டணம் பெற்றுக்கொண்டு விஜயநகரம் செய்து வருகிறது. நாடுகளின் தொகுப்பு அவர்களால் நிர்வகிக்கப்பட்டு பரஸ்பர ’விற்பனை – வாங்குதல்’ சார்ந்த பணம் ’கொடுத்தல் – வாங்குதல்’ அவர்களால் சீராகத் தீர்வு செய்யப்படுகிறது. பார்த்திருப்பீர்களே, இங்கே உத்தர கன்னடத்திலும், அடுத்த பிரதேசங்களில் அத்தனை நாடுகளிலும் விஜயநகர் காசு பணம் தான் புழங்குகிறது. வராகன், பணம், காசு, விசா. அவற்றின் மதிப்பு எல்லா இடங்களிலும் ஒன்றுதான். அந்த நிதி மதிப்பு நிர்வாகம் விஜயநகரம் செய்வது”

மிளகு  அத்தியாயம் முப்பத்திமூன்று

மிங்கு, தீபாவளி நேரத்திலே எல்லோரும் சந்தோஷமா இருக்கணும். அந்த நேரத்துக்காவது இல்லே அது போல  நேரங்களிலாவது  ஸ்கர்ட்டும் ப்ளவுசும் உன்னை மாதிரி குமருகள் உடுத்த ஆசைப்பட்டா, ரொம்பவும் கண்டிக்கக் கூடாது தானே. முழுக்க உடம்பு மூடின உடுப்பு அதெல்லாம்னு மிங்குவுக்கு தெரியும் தானே. அதுவும் துணியும் செய்நேர்த்தியும் மட்டும் தான் போர்ச்சுகீஸ். தைத்து உடுப்பாக்கி தந்தது நம்ம தையல்காரங்க. பிடவை கூட இடுப்பு தெரியும். ஸ்கர்ட் போட்டா முழுசாக மூடி இருக்கும்”.

மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு

அர்ஜுனனான அவர் சந்தேகத்தைத் தீர்த்த கிருஷ்ணன். அதெப்படி கஸ்டமர் கேட்ட அரை மணி நேரத்திலே பாயசம் வந்துடறது என்று கேட்டால், மனைக்கு வரச்சொல்லி அங்கே வரிசையாக வைத்திருந்த நாலு ரெப்ரிஜிரேட்டரில்  பால்  பொடியும், கண்டென்ஸ்ட் மில்க்கும் பொடித்து வைத்த ஏலமும், வேகவைத்த முந்திரியும், ஊற வைத்த குங்குமப்பூவும், பிசினாக வைத்த பச்சைக் கற்பூரமும், வேகவைத்த பாலடையும், பல நிலையில் பாகு வைத்த வெல்லமும், சீனியும் பசும்பாலும், எருமைப் பாலும்,  விதவிதமாக பால்பாயசத்தின் முன்வடிவங்கள் என்று அறிமுகப்படுத்தினார். 

மிளகு  அத்தியாயம் முப்பத்தொன்று

இந்த கலாசார பரிமாற்றத்தை போர்த்துகல்லில் பாதிரியார்கள் கண்டிக்கிறதாகவும், கொங்கணியை அவர்கள்  உத்தேசித்திருப்பதாகவும் லிஸ்பனிலிருந்து வரும் வதந்திகள் தெரிவிப்பதாக நஞ்சுண்டய்யா பிரதானி நேமிநாதனிடம் சொல்லியிருக்கிறார். எது எப்படியோ, கொங்கணக் கொங்கைகள் இப்போதைக்கு லிஸ்பனில் குலுங்கிக் கொண்டிருக்கின்றன.வார இறுதியில் கவிதை,  நஞ்சுண்டையா வீட்டு மிளகுப் பொங்கல், ரோகிணி என்று மனம் சுவாரசியமான கலவையாக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது.

மிளகு  அத்தியாயம் முப்பது  

வேறு ஒன்றுமில்லை இந்த உங்கள் வீட்டு மாடியில் இரண்டு விசாலமான அறைகள்  இருப்பதைப் பார்க்கிறேன். இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவ்வப்போது இங்கே வந்திருந்து கடல்காற்று வாங்கி மனதுக்குப் பிடித்த வைத்திய சாஸ்திர ஏடுகளை ஆராய விரும்புகிறேன். நான் பைத்தியநாத் அரச வைத்தியரிடம் வைத்திய சாஸ்திரம் பயில்வது தங்களுக்குத் தெரிந்திருக்கலாம் சென்ஹோர் பெத்ரோ. இரண்டு வீடு கடந்து பிரதானி நஞ்சுண்டையாவோடு சேர்ந்து இந்தியக் கவிதைகளை போர்த்துகீசிய மொழியாக்கம் செய்யவும் செயல்படுகிறேன். எல்லாவற்றையும் கவனிக்க, இந்த இரண்டில் ஒரு மாடி அறையை எனக்கு தற்காலிகமாக கொடுத்து விடக் கோருகிறேன். மாதம் நூறு வராகன் குடக்கூலி தருவேன். அதற்கு மேல் தேவை என்றாலும் தருவேன்”.  

மிளகு  அத்தியாயம் இருபத்தொன்பது

அந்த வீதியில் அழகான பெண்கள் நடந்து போனால் மட்டுமே தலைகள் உயரும். பேரழகியர் பல்லக்கில் போனால் ஒரு நிமிடம் செயல் மறந்து, மெய் மறந்து எல்லோரும் பார்ப்பார்கள். அதி சிறப்பான தெய்வீக ஆரணங்குகள் ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில் சூரிய பகவான் போல் கிழக்கிலிருந்து மேற்கே போனால் சாரட்டுக்குப் பின்னே சகல வயதினரும் உன்மத்தம் கொண்டு ஊர்ந்திருக்கலாம். 

மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு

கைவேலை காட்டமாட்டாள் அவள் விருந்தாளிகளிடம். சந்தோஷமாக கள்ளும்  பிராந்தியும் கலந்து அருந்தி ஓவென்று குதித்துக் கூக்குரலிட்டு அனுபவிக்கட்டும். நாளை முதல் தள்ளுபடி விலை, இலவச பானம் அவ்வப்போது. நிச்சயம் வந்து விடுவார்கள். கேட்ட மதுவில் ஒரு சிறு நகக்கண் அளவு ஊமத்தைப் பொடி கலந்து விடுவாள். ஒன்றும் புதுசாகத் தெரியாது. கொஞ்சம் தலை கிர்ரென்று சுத்தலாம் என்று வைத்திய செங்கமலம் சொன்னாள். அரிந்தம் வைத்தியரின் சிஷ்யர்களும் அதைத்தான் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். வரும் திங்களுக்குள் இந்த வீரர்கள்   ஹொன்னாவர் வீதிகளில் போதம் கெட்டு அலைவார்கள்

மிளகு – அத்தியாயம் இருபத்தேழு  

இன்னிக்கு விளையாடற மனசு. என் சங்கிலியைக் கழற்றி கேசரியோடு போட்டுட்டேன். பாவம் குழந்தை குட்டிக்காரி சிவராத்திரி அன்னிக்கு சுவாமி கொடுத்ததா இருக்கட்டும். ஏ பொண்ணு, காவேரி, உன் பக்திக்கு மெச்சி சிவன் உனக்கு இன்னொரு சங்கிலி பொன்னாலே செஞ்சு அனுப்பியிருக்கார். எடுத்துட்டு போ உன்னோடது ரெண்டு சங்கிலியையும்”.  
’இந்தப் பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது’ என்று பொருள் தரும் இந்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார் பரமன்.

இரா. முருகனின் நளபாகம்

This entry is part 44 of 48 in the series நூறு நூல்கள்

முருகன் சொற்பமான இவ்வரலாற்றுத் தரவுகளைச் சாரக்கட்டாகப் பயன்படுத்தி நானூறு ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் இரு நூற்றாண்டு முடிவுகளில் (பதினாறாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இறுதி) அரசியல், ராஜதந்திரம், வஞ்சகம், போர், பொது மக்கட்கருத்துத் திரிபு, தீவிரவாதம், மதச்சார்பு, நட்பு போன்றவற்றை பாவிழையாகவும் உணவையும் காமத்தையும் அவற்றிற்கு மேலும் கீழும் ஓடும் ஊடு நூலாகவும் பின்னிப் பிணைத்து ஒரு மாபெரும் கதையாதலை நெய்கிறார். பதினாறாம் நூற்றண்டிலிருந்து திரண்டு வரும் இக்கதையாடல்கள் பரமன் என்ற பாத்திரத்தின் வழியே இருபதாம் நூற்றாண்டிறுதியில சன்னமாக எதிரொலித்து புது அர்த்தங்கள் கொள்கின்றன.