ஐமிச்சம்

சினிமாவில் உதவி இயக்குனராக வேண்டும் என்று முடிவு செய்து வாய்ப்பு தேடத் தொடங்கிய இந்த ஒன்றரை வருடத்தில் எத்தனையோ விதமான மனிதர்களை சந்தித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம். ஆனால், ஒன்று சொன்னாற்போல எல்லாரும் ஒரே கேள்வியைக் கேட்பார்கள்.
“நெறய பசங்களே தோத்துப் போன எடம். பொம்பள புள்ள சமாளிச்சுருவியா…”
நான் முழுக்க என்னை மட்டுமே நம்பினேன். என்னை மீறி எதுவுமே எனக்கு நடந்து விடாது என்ற நம்பிக்கை இன்றளவும் எனக்கு இருந்தது.