இப்போது எழுபத்தைந்து வயதான சௌமித்ரா தன் தொழிலிருந்தும் ஓய்வு பெற்று, கல்கத்தாவின் மேல்தட்டு வர்க்கத்தினர் வசிக்கும் ஆடம்பரமான, அழகான, அமைதியான குடியிருப்புப் பகுதியில் அழகிய தோட்டத்துடன் கூடிய ஒரு பங்களாவில் ஒரு வேலைக்காரனுடன் தனியே வசித்து வருகிறார். அவருக்கு இருக்கும் சொற்பமான நண்பர்களுடன் மாலை நடைக்குப் போவது, பாட்மின்டன் விளையாடுவது, அவருடைய அற்புதமான பாடல் சேகரத்திலிருந்து ஹிந்துஸ்தானி சங்கீதம், ரபீந்த்ர சங்கீதம், மேலை இசை இவைகளைக் கேட்பது, செஸ் விளையாடுவது என்று அவரின் நாட்கள் கழிகின்றன. அவர்கள் யாருக்கும் கூட இவர் நாற்பந்தைந்து ஐம்பது வருடங்களுக்கு முன்னால் சினிமாவில் நடித்திருக்கிறார் என்று தெரியாது.
Tag: மாலதி சிவராமகிருஷ்ணன்
அணங்கு கொல்?
அதில் அந்த பெண் கொஞ்சம் பெரியவளாக இருபதுகளின் இறுதியில் இருப்பவள் போல இருந்தாள். அவளும் மராத்திக்கட்டு புடவை கட்டிக்கொண்டிருந்தாள்.கூட இரண்டு பெண்ணும் ஒரு ஆணுமாக குழந்தைகள்.” வாம்மா! வாங்கோடா கண்களா!” குழந்தைகளை அணைத்துக்கொண்டு ஆயி கேட்டாள் “என்னடி பார்வதி! உங்க மடிசார் கட்டிக்காமல் நம்ம கட்டு கட்டிண்டு இருக்கே ”
“இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி
“அந்த ஒரே இரவில் நாங்கள் அனைவரும் பெரியவர்களானோம். சிதையில் எரிந்தது எங்கள் பாட்டி மட்டுமில்லை, எங்கள் பால்யமும்தான்.” என்று நேரடியாக தலைப்பும் முடிவும் ஒன்றாகும் இக்கதை வாசகனிடம் விட்டுசெல்வது, இந்த எளிய வார்த்தைகளை மீறிய வலிமிகுந்த இழப்புணர்வை. குழந்தைகளின் நினைவுகளில், களிமண்ணில் அச்சுபோல எத்தனை எளிதாக, கவனிப்பதும் கவனிக்காததும் பதிந்துவிடுகின்றன.
இரு புறமும் சுழலும் கடிகாரங்கள்
“புரியறதும்மா! வாழ்க்கையில எந்த முடிவையுமே நான் சரியா எடுத்ததில்லை! ஐ வாஸ் அ டோடல் ஃபைலியர்!”
…அவளுக்கு மனசுக்கு கஷ்டமாக இருந்த்து.
“சாரிப்பா! ரொம்ப சாரிப்பா! நான் அந்த அர்த்தத்துல சொல்லலப்பா!”
கழுத்து நீண்டு வாய் குறுகிய பாட்டிலுக்குள் ஒரு காடு
ஜன்னலுக்கு வெளியே வெகுதூரத்தில் தெரிந்த பொட்டல் வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பொட்டல் வெளி மௌனமாய் அசைவது தெரியாமல் மெதுவாக அசைந்துகொண்டிருந்தது ; மின் கம்பங்கள் கத்திக்கொண்டே வேகமாக பின்னோக்கி ஓடின. அவள் அருகில் அமர்ந்திருந்த ராம் அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு அவனுக்கு அந்தப்பக்கத்தில் உட்கார்ந்திருந்த மன்னியிடம் அவன் ட்ரேட் மார்க் “கழுத்து நீண்டு வாய் குறுகிய பாட்டிலுக்குள் ஒரு காடு”
போர்வை
“சேப்பா இருக்கா இல்லை?” என்றான் அண்ணா.
“ஆமா! கிழிச்சா! வாயைத் திறந்தா அசடு வழியறது”
“நீ சொல்றது சரியா , தப்பான்னு நான் டிஸைட் பண்றேன்”
“உன் கிட்ட சொன்னேன் பாரு! நீ என்ன பெரிய ஜட்ஜா, தீர்ப்பு சொல்றதுக்கு”
அடித்தொண்டையில் இவ்வளவும் சொல்லி முடிப்பதற்குள் அவள் வந்தாள்.
“உனக்கு ஒரு அண்ணாவும், தம்பியும்னயே? ரண்டு பேரும் தம்பி மாதிரி இருக்காளே?”
அண்ணாவை சரியாக அவனுடைய பலவீனமான இடத்தில் தாக்கிவிட்டாள். அந்த ஒரு வார்த்தையில் அவனுடைய பரம எதிரியாகி விட்டாள்! எனக்கு சந்தோஷமாக இருந்தது!
தெளிவு
மாமியின் பேச்சில் பொதுவாக ஒரு ஐம்பதைந்து வயதான , மேல் மத்திய தரக் குடும்பப் பெண்மணியிடம் நாம் எதிர்பார்க்கிற மனமுதிர்ச்சி, பக்குவம், நிதானம் இவை எதுவும் இருப்பதில்லை. மனதில் தோன்றியதை தோன்றியவுடன் பேசுகிற சுதந்திரமான, விளையாட்டுத்தனமான மனநிலையில் இருப்பவர்போலத்தான் அவர் பேசுகிறபோது தோன்றும். சில சமயம் அவரின் கேள்விகள் இருட்டு அறைக்குள் , தெருவில் வருகிற காரின் தலை விளக்கு வெளிச்சம் ஒரு க்ஷணம் சடக்கென்று எதிர்பாராத வெளிச்சத்தைத் தருவது போல இருக்கும்.
அன்னியன்
எல்லாருடைய கண்களும் அந்த குழந்தையின் மேல்தான். அழகும்ஆனந்தமும் வடிவெடுத்ததுபோல் இருக்கிறது அந்த குழந்தை. அந்த கொழு கொழு கன்னத்தை, கைகளை தொடையை முத்தமிட வேண்டும் போல் இருக்கிறது. பெரிய மூக்கும் , தலையில் காந்தி குல்லாவுமாக இருக்கிற மராட்டி கிழவர் மேல் உட்கார்ந்து கொண்டு அவர் பெரிய மூக்கை கிள்ளுகிறது, அதை தடுத்தால் குல்லாயை உருவுகிறது. பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற மராட்டி கட்டு புடவை கட்டிக்கொண்டு கத்திரிப்பூ நிறத்தில் பெரிய குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டிருக்கிற கிழவிக்கு ஒரே பெருமை. அது அவள் பார்வையிலேயே தெரிகிறது. கி ழவரிடம் இருந்து குழந்தை கிழவியிடம் தாவி அவள் குங்குமப் பொட்டை நோண்டுகிறது. கிழவி சிரித்துகொண்டே “விஷமக்காரன்! எப்படி படுத்துகிறான் பாருங்கள்”